திருக்குறள் (Tirukkural) by Tiruvalluvar.

Translation Veeraswamy Krishnaraj

Herein, I have listed the first and the last verses in each chapter: 1 and 10; 11 and 20… This, I hope will capture the message of Valluvar.

I have parsed the Tamil Compound Words into lexemes for easy understanding. English meaning of Tamil words follows Tamil Lexicon of Madras university.

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 0001

A is the first among all letters; (likewise) the Primal God is the first in the world.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடி சேராதார்.0010

The Great Ocean of Birth the Swimmer swim not, if he did not attain the feet of the All-Abider (God).

வான் நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரறல் பாற்று.0011

From the rain, the world draws its sustenance; thus it deserves accolades as ambrosia.

நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்

வான் இன்று அமையாது ஒழுக்கு.0020

Without water, the world does not function. Thus said, without rain, there is no natural spring of water. 

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு. 0021

Thinking at the beginning of a treatise of the greatness of conduct and relinquishment of desire by great men offers goodness.

அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்

செம் தண்மை பூண்டு ஒழுகலான். 0030

Since they entertain compassion to all other living beings, they are the repository of Dharma.

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு. 0031

It (Virtue) offers distinction and wealth. What other treasure is there beyond these for the man?

செயல் பாலது ஓரும் அறனே ஒருவற்கு

உயல் பாலது ஓரும் பழி. 0040

Virtue is the sum of all permitted good acts; Vice is the sum of all forbidden evil acts.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல் ஆற்றில் நின்ற துணை.0041

The householder in domestic life is the supportive helper of the threesome of  akin nature: the relatives, the friends, and the poor.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.0050

The observant householder is placed among the sky-dwelling (heavenly) gods.

மனைத்தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்

வளம் தக்காள் வாழ்க்கைத் துணை. 0051

She of excellence in spousal dignity spends within the means of her wedded husband and is the appropriate spousal help in the domestic life.  

மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்

நன் கலம் நன் மக்கள் பேறு.0060

Auspiciousness is the greatness of a wife. Besides that, good children are a jewel.

பெறும் அவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த மக்கள் பேறு அல்ல பிற.0061

Among all acquisitions, intelligent children are the asset. Otherwise, none else is worthy of possession.

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என் நோற்றான் கொல் எனும் சொல்.0070

What help a son offers to a father is the saying (by others) what penance a father did to beget him.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்

புன் கண் நீர் பூசல் தரும்.0071

Is there a fastening bolt that bars love? Meager tear of the affectionate will announce the love by raising an uproar.

அன்பின் வழியது உயிர் நிலை அஃது இலார்க்கு

என்பு தோல் போர்த்த உடம்பு.0080

The sign of soul in the body is the path of love. For those devoid of love the body is mere skeleton wrapped with skin.

இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி

வேளாண்மை செய்தல் பொருட்டு.0081

The very purpose of leading a domestic life is to cater to the needs of a guest.

மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து

நோக்க குழயும் விருந்து.0090

Scarlet pimpernel flower fades with smelling. Likewise, the guest fades at the sight of sour face of the host.

Verse 0090. அனிச்சை அல்லது அனிச்சம் (Anagallis arvensis, Scarlet pimpernel) மிகவும் மென்மையான இதழ்களினை உடைய ஒரு பூக்களைக் கொண்ட ஒரு தாவர இனம். முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது இந்தப் பூ. இதன் இதழ்கள் மென் செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களாகக் காணப்படும். இது சூரியன் இருக்கும் திசையில் இலைகளைத் திருப்பும். Wikipedia Tamil

Scarlet pimpernel flower petals are very delicate and thus are prone to fading upon smelling. The flower consists of five petals. The petals open with the sunlight and close with sunset.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.0091 Sweet Words

The words from the mouth of the informed and the virtuous being sweet and compassionate are devoid of falsehood.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனி இருப்ப காய் கவர்ந்து அற்று.100

When sweet words abound, saying bitter words is like grasping the unripe in the place of ripe and sweet fruits.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும்  மாற்றல் அரிது.0101 Gratitude

Gift of heaven and Earth will not recompense for help received without prior gift to the donor.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.0110

There is refuge for the killers of kindness. There is no refuge for those who killed gratitude.

தகுதி என ஒன்று நன்றே பகுதியான்

பால்பட்டு ஒழுகப் பெறின்.0111 Fairness

Equity is a virtue, if you put yourself in the place of a contrarian.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தம்போல் செயின். 0120

If the merchant does cherish his trade, he will treat other’s property as his own. (The merchant will not shortchange the customer.)

அடக்கம் அமரர் உள் உய்க்கும் அடங்காமை

ஆர் இருள் உய்த்து விடும்.0121 Restraint

Self-restraint is a virtue that places man among gods. Lack of it drives him into the thick of darkness.

கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 0130

Having learnt to control anger and exercising self-control, virtue will become his natural companion.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.0131 Virtuous Conduct

Since virtuous conduct gives greatness, it should be safeguarded more than life itself.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்

கல்லார் அறிவிலாதார். 0140

Though learned in many arts, they who do not get along in this world are ignoramuses.

பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல். 0141 Avoiding Extramarital

The virtuous in the world do not succumb to the foolishness of desiring for another’s wedded wife.

அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்

பெண்மை நயவாமை நன்று. 0150

Though an unjust person committed adharmic deeds, it is proper not to covet neighbor’s wife for sexual pleasure.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 0151 Avoiding Vindictiveness.

As the earth tolerates the digger of a hole, it is laudatory to put up with the reviler.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின். 0160.

The austere ascetics tolerating hunger pains are great. They are way behind those who sustain mental distress from harsh words of others.

ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு. 0161 the unjealous

As the unjealous remains decorous in his mind, every man should have the nature of good conduct.

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். 0170

No one became rich from jealousy; no one lost his fortune from lack of jealousy.

நடுவு அன்றி நன்பொருள் வெஃகில் குடி பொன்றி

குற்றமும் ஆங்கே தரும். 0171 Avoiding Usurpation

Desiring to usurp unjustly legitimate property of the other, it brings ruination of family and resultant evil.

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்

வேண்டாமை என்னும் செருக்கு. 0180

Since someone unthinkingly desires to usurp another’s property, ruination is his lot. The greatness of avoiding usurpation gives him the strength of character.

அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன் 

புறம் கூறான் என்றல் இனிது. 0181 Backbiting

Though a person does deeds against established norms, it is good to know that he will not engage in backbiting.

ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பில்

தீது உண்டோ மன்னும் உயிர்க்கு. 0190

Allowing one realizes the faults of others as equal to his faults, is there evil to the lives in the world?

பல்லார் முனிய பயன் இல சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும். 0191 Avoiding useless words

Talking useless words elicits from many people hatred, disgrace and dishonor.

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயன் இலா சொல். 0200

When you speak, speak useful words. Do not utter useless words in your speech.

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு. 201 Fear of doing evil

Evil doers will not be afraid to commit evil because of haughtiness. The excellent will be afraid (to do such evil acts).

அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி

தீவினை செய்யான் எனின். 0210

If a person does not rush to inflict evil deed to another person, we know for sure that he will not meet with disaster.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு

என் ஆற்றும் கொல்லோ உலகு. 211 Selfless service

Duty does not seek a return reward. What kind of recompense can the world do for the rain?

ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்

விற்று கோள் தக்கது உடைத்து. 220

If munificence were to cause ruination (to the giver), its nature is that the giver sold himself to fulfill its intent.

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்

குறி எதிர்ப்பை நீரது உடைத்து. 221 Charity

True charity is to give to the poor. All other giving is of the nature of expectation of specific benefits.

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்

ஈதல் இயையாக் கடை. 230

There is nothing more miserable than death. Death is sweet, if there is no quality of giving ( in that person).

ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு. 231. Fame

Giving to the poor is fame. If not for it, there is no use for life (or living).

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய

வாழ்வாரே வாழாதவர். 240

Those who live to remove calumny (and seeking no fame) are the truly living. He who lives a life of infamy is empty of life.

அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்

பூரியார் கண்ணும் உள. 241 Chapter 25 Ascetic’s Virtue

Of all wealths, compassion is the real wealth. Even vile people have material wealth.

வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்

மெலியார் மேல் செல்லும் இடத்து. 250

When a person is overbearing a weaker person, he should think of putting himself before the stronger overbearing person.

தன் ன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள். 251 Chapter 26 Not eating flesh

The person in order to grow his muscles eats the flesh of an animal. How could he be practicing compassion?

கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி

எல்லா உயிரும் தொழும். 260

With opposed palms all life forms will worship the person, who is neither a butcher nor a flesh eater.

உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு. 261 Chapter 27 Tapas = Penance

To tolerate one’s miseries and desisting from causing misery to other beings are the attributes of Tapas (penance).

இலர் பலராகிய காரணம் நோற்பார்

சிலர் பலர் நோலாதவர். 270

The have-nots (of penitence) became many for the reason there are only a few ascetics (நோற்பார்). Many are not endurers (நோலாதவர் = non-penitents, Non-endurers)

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும் 271 Chapter 28 கூடாவொழுக்கம் = Improper or immoral conduct (Tamil Lexicon)

An ascetic living a lie is the subject of ridicule inside (his body) by the five elements.

An ascetic in appearance and an epicure in practice is subject to ridicule by the five elements that makes his body.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின். 280

If the worldly reproachable acts are abandoned, shaving the head or growing long hair are unnecessary.

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்

கள்ளாமை காக்க தன் நெஞ்சு. 281. Chapter 29 கள்ளாமை Non-stealth

He, who desires not to invite infamy, should guard against thoughts of stealing property.

கள்வார்க்கு தள்ளும் உயிர் நிலை கள்ளார்க்கு

தள்ளாது புத்தேள் உலகு. 290

The thieves suffer setbacks in life. The non-stealers will obtain the world of gods without any delay. 

வாய்மை எனப்படுவது யாது எனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல். 291 Chapter 30 வாய்மை  Truth in word

Truth in word is to utter words that cause no harm.

யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற. 300

Among all we found as Truth, there is nothing as good as the truthful word.

செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்தில்

காக்கில் என் காவாக்கால். 301 Chapter 31 Not getting angry

For a man who controls his anger towards the meek, what does it matter whether he controls it or not in other places.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தை

துறந்தார் துறந்தார் துணை. 310

Excessively angry men are like the dead men. Those who forsake anger are like the renouncing ascetics.

சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசு அற்றார் கோள். 311 Chapter 32 Not doing Evil

Though one obtains glory-yielding wealth, not doing evil to others is the nature of stainless men.

நோய் எல்லாம் நோய் செய்தார் மேல ஆம் நோய் செய்யார்

நோய் இன்மை வேண்டுபவர். 320

All evil befalls the evildoer. The Seeker of no evil will not commit evil.

அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும். 321 Chapter 33 Not killing

What is Virtuous Work? It is not killing. Killing causes other evils.

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப

செயிர் உடம்பின் செல்லா தீ வாழ்க்கை யவர். 330

Persons who took away life (in the previous life) are the ones who live a life of interminable illnesses.

நில்லாதவற்றை நிலையின என்று உணரும்

புல் அறிவாண்மை கடை. 331 Chapter 34  Non-eternal

A person of low intelligence feels the non-eternal is eternal.

 

புக்கு இல் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு. 340

The soul found a temporal shelter in the body: Is it because it did not find an eternal abode?

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன். 341 Chapter 35 Renunciation

From whatever-whatever man removes himself, from that-that man will not suffer any hurt.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு. 350

To abandon desires, cling to the Desireless (God); continue to cling to that desire. 

பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்

மருளான் மாணாப் பிறப்பு. 351 Chapter 36 Realization of the Truth. The confused who considers the unreal as the Real (God) takes birth as a low life.

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெட கெடும் நோய். 360

Upon extinction of the three names (defects) Avarice, Anger, and Ignorance, malady (of rebirth) will perish.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅ பிறப்பு ஈனும் வித்து. 361 Chapter 37 Removal of Desire

Desire is the birth-causing Seed without remiss at all times for all living beings.

ஆரா இயற்கை அவா நீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும். 370

Desire is irrepressible. If you were to remove it, that state will yield (you) the nature of Immutability.

ஆகு ஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள்

போகு ஊழால் தோன்றும் மடி. 371 Chapter 38 Past Karma Fruits. Salubrious Past Karma brings wealth without weariness. Insalubrious Past Karma brings indolence.

ஊழில் பெருவலி யாவுள? மற்றொன்று

சூழினும் தான்முந்து ஊறும். 380

What is stronger than the Past Karma? Whatever stratagem is put in place to change it, it will stand in the forefront.

Part 2.  பொருட்பால் = Wealth.  1. அரசியல். 2. அங்கவியல்; ஒழிபியல்

1. அரசியல் Governance (by the king)

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு. 381 Chapter 39 Greatness of king

Army, Subjects, Wealth, Government (Minister), Friends, and Fort are the six attributes that make the king the greatest among kings.

கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்

உடையாநன் ஆம் வேந்தர்க்கு ஒளி. 390

Giving, Clemency, impartial administration of justice, Protection of subjects’ physical welfare and property rights are the four that make a king a splendor to kings.

கற்க கசடு அற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக. 391 The three Rs.

Learn without any defects. After what one should learn is at hand, a conduct commensurate with that learning is in order.

கேடு இல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு

மாடு அல்ல மற்றையவை. 400

For a person, impeccable education is in imperishable wealth. Other kinds of wealth are not sustainable.

அரங்கு இன்றி வட்டு ஆடி அற்றே நிரம்பிய

நூல் இன்றிக் கோட்டி கொளல். 401 Chapter 41 Not learning

To talk in an assembly without full knowledge is like playing chess without chess pieces.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர். 410

Men proximate to the erudite men learned in literary works are like animals proximate to people.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை. 411 Aural Wealth Chapter 42

Of wealth, aural wealth is the greatest and the highest. Aural wealth = Learning by hearing

செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என். 420

People who know taste by the palate but not by the ears: it does not matter whether they live or die.

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள் அழிக்கலாகா அரண். 421 Having Knowledge Chapter 43

Wisdom is an instrument that wards off ruin. It is the inner and impenetrable fortress, which the enemies cannot destroy.

அறிவுடையார் எல்லாம்  உடையார் அறிவிலார்

என் உடையரேனும் இலர். 430

The wise possess all. The ignoramuses with other wealth possess nothing.

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து. 431 Removal of faults Chapter 44

With no Haughtiness, Anger, and Small-mindedness, these men’s increasing riches are worthy of greatness.

காதல காதல் அறியாமை உய்க்கில் பின்

ஏது இல ஏதிலார் நூல். 440

If you were to remove the ignorance to attain all desired objects, the enemy’s designs entail no causality.

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன் அறிந்து தேர்ந்து கொளல். 441 

Having the help of the Great Men. Chapter 45

One should seek the help of the virtuous Intellectuals with mature knowledge, after assessing their ability.

பல்லார் பகை கொளலில் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல். 450

Loss of connection with the virtuous causes ten times more evil than the enmity with many. 

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமா சூழ்ந்து விடும். 451 Avoiding the mean kind Chapter 46

Greatness fears the mean kind. Meanness will become the kinsmen (if the great are not careful).

நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல். 460

There is no greater help than the virtuous kind; there is no misfortune greater than the association with the evil kind.

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல். 461 Know before you act Chapter 47

(Before a task begins) expenses, achievements and gains on its path should be points for consideration.

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

கொள்ளாத கொள்ளாது உலகு. 470

Think of the irreproachable and do it. What is unacceptable to you is also unacceptable to the world.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல். 471 knowing your strength Ch. 48

The worthiness of a deed, the strength of oneself, of the opponent and also of the helper should be weighed before one acts.

உளவரை தூக்காத ஒப்புரவாண்மை

வளவரை வல்லைக் கெடும். 480

Not knowing the limitations of munificence, the limited wealth will soon dissipate.

பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 481 Timing and knowing it Ch. 49

The crow will win over the owl in the day. Likewise, the king should know the time to win over his enemy.

கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்

குத்து ஒக்க சீர்த்த இடத்து. 490

The heron lays low until the seasonable time, wherein it strikes its prey; likewise, one should act at a moment’s notice.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடம் கண்ட பின் அல்லது. 491 Knowing the place Ch. 50

Do not begin any task unless you know the place for completion. Do not be indifferent and despising.

கால் ஆழ் களரில் நரி அடும் கண்ணஞ்சா

வேல் ஆள் முகத்த களிறு. 500

A fox will vanquish an intrepid elephant with spear-like tusked face, when its legs are stuck deep in the mire.

அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறம் தெரிந்து தேறப் படும். 501 Knowing & trusting Ch.51

Know one’s deportment about his foursome, Virtue, Wealth, Sexuality and life in danger, before you put your trust in him.

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும். 510

Trusting an unknown person and entertaining doubts after trusting him are a cause for constant unhappiness.