09TirumantiramTamil-English
திருமந்திரம் (திருமூலர் அருளியது)
ஒம்பதாந்
தந்திரம்
(2649
- 3047)
Translation by Dr. Natarajan
Presentation by Veeraswamy Krishnaraj
TMTM =TiruManTiraM by Chapters 01-09
Tirumantiram Verses and links: Tantras 01-09. By Verses |
||
TirumantiramTamil-EnglishAll.htm (Complete Tirumantiram) TirumantiramTamil-EnglishAll.pdf (Complete Tirumantiram)
Tirumantiram All 9 Chapters in Tamil and English-pdf and htm files |
The Tirumantiram is divided into nine chapters (tantirams); Wikipedia |
1. Philosophical views and divine experience, impermanency of the physical body, love, education etc. |
2. Shiva's glory, His divine acts, classification of souls etc. |
3. Yoga practices according to the eight-angled way of Patanjali. |
5. Various branches of Saiva religion; the four elements of Shaiva Siddhanta. |
6. Shiva as guru bestowing grace and the devotee's responsibility. 1573-1703 |
7. Shiva linga, Shiva worship, self-control. 1704-2121 |
8. The stages of soul experience . 2122-2648 |
9. Panchadsara manthiram, Shiva's dance, the state of samadhi, etc. 2649-3047 |
09TirumantiramTamil-English |
ஒம்பதாந்
தந்திரம் (2649
- 3047) |
9. Panchadsara manthiram, Shiva's dance, the state of samadhi, etc. 2649-3047--Wikipedia Title
1. குருமட தரிசனம் |
1 DARSHAN OF GURU MONASTERY |
2649. பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த் தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. 1 |
2649: Gurus Have Reached Lord's Feet Smoke and sound Oblations and sacrificial offering In worship spread; "All these are for my Lord;" The Gurus who thus meditate, Who have monasteries founded, Have verily reached Feet of Lord. |
2650. இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும் அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே. 2 |
2650: Lord is in the Body None the habitation the Lord has But the body-house of Jiva; Or has the Lord any other home? Let them find out; Even after having found out That Jiva's body is Siva's home They say, "He (Lord) is outside." |
2651. நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி தேட அரியன் சிறப்பிலி எம்இறை ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே. 3 |
2651: Great Way of Seeking Having discovered the Great Way of seeking The flower-decked feet of Siva I reached within; Beyond seeking is He; Greatness indeed is where He resides; He stood as life of the revolving world. |
2652. இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் இடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே. 4 |
2652: Revelation of Lord's Abode I shall reveal where He is seated; And where His mountain is; I shall reveal where His retreat-cave is And where that is located; I shall reveal where His Adharas (triple) are; And the forest where He is All these eight I shall reveal To denizens of world here below. |
2653. முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம் அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி அகம்பர மாதனம் எண்எண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. 5 |
2653: Lord is in Guru's Monastery The Guru-face is Lord's pedestal The monastery is Lord's Holy Land; The Holy Assembly of blemishless vision Is Lord's abode; The heart that performs the Sixteen worships inside Is Lord's sacred throne; The Adharas within Are Lord's astral cave. |
2654. அகமுக மாம்பீடம் ஆதார மாகும் சகமுக மாம்சத்தி யாதன மாகும் செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும் அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே. 6 |
2654: Lord's Abode Inside the Body The Adharas six are His pedestal inward The Sakti pervasive is His Throne The universal God within is Siva Himself; Thus it is, For these who inward reflect and know. |
2655. மாயை இரண்டும் மறைக்க மறைவுறும் காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள் ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே. 7 |
2655: Jnanis Seek Lord Within the Light of Manifestness Mayas twine envelope the body of sheaths five When their end they reach, The Holy Light of itself appears; Those who seek the Truth in that Manifestness (Svarupa) Are the Jnanis, in Silentness Exceeding. |
2. ஞானகுரு தரிசனம் |
2 DARSHAN OF JNANA GURU |
2656. ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில் கூறக் குருபரன் கும்பிடு தந்திடும் வேறே சிவபதம் மேலாய் அளித்திடும் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. 1 |
2656: When the Holy Guru Appears When the Tattvas six and thirty subdued are, Then shall the Holy Guru appear For you to adore; Siva-State too will on you be conferred; And then will well up the Bliss Ineffable. |
2657. துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய பரசிவம் யாவையும் ஆகி விரிவு குவிவுஅற விட்ட நிலத்தே பெரிய குருபதம் பேசஒண் ணாதே. 2 |
2657: Parasivam is Beyond the Three Turiyas Beyond the Turiyas Three Is the Light Resplendent; It is the Parasiva that pervades all; In that Land That knows neither contraction nor expansion Are the Feet of Guru Holy That, beyond speech, is. |
2658. ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன் வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன் காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன் சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே. 3 |
2658: What These Body Organs are for To bear Nandi's Feet, I was gifted this head; To praise Nandi Great, I was gifted this mouth; To vision Nandi Eternal, I was gifted these eyes; To think of Nandi afar, I was gifted this mind. |
2659. கருடன் உருவம் கருதும் அளவில் பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல் குருவின் உருவம் குறித்த அப் போதே திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே. 4 |
2659: At the Thought of Guru's Form Impurities Vanish At the thought of Garuda's form The serpent's poison leaves Its terrors lose; Unto it, At the thought of Guru's form The triple Malas leave instant; The Jiva then Siva becomes. |
2660. அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே. 5 |
2660: When Jiva Becomes Siva None know where the Lord resides, To those who seek where the Lord resides The Lord within them resides; When they the Lord see, Jiva becomes Siva. |
2661. தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும் மான்ற அறிவு மறிநன வாதிகள் மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே. 6 |
2661: God is in the Silentness of Perception Beyond Three Turiyas To perceive the things that appear, To perceive the things that appear not, That is Knowledge Higher; To perceive the things in ways different As in waking, dreaming and rest of states, -These three perceptions will there be not, In the State the Three Turiyas transcended; There Nandi stands firm, in Silentness Exalted. |
2662. சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக் கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும் பந்தம் இலாத பளிங்கின் உருவினள் பந்தம் அறுத்த பரம்குரு பற்றே. 7 |
2662: Sakti is in Ajna Center In the Center between the eye-brows Is the Sphere of the Moon; There on the flower of petals two Is Virgin Sakti seated; Radiant as Crystal is Her Form; (To vision Her) Seek you the Guru Who all bonds sundered. |
2663. மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச் சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்க வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே. 8 |
2663: Siva is in Sahasrathala (North) Into heart He entered, For the seven Worlds to rejoice; Into earth He entered For the heavens to support; Into rage He entered For the eight directions to tremble; Into wilderness He entered His abode in North Mountain to be. |
2664. தானான வண்ணமும் கோசமும் சார்தரும் தானாம் பறவை வனமெனத் தக்கன தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில் தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே. 9 |
2664: Way of Seeking Within Leads to Supreme Attainment Of five sheaths is the Jiva's body; Unto a forest is that body Where the Jiva-bird its abode has; If the Jiva seeks the Way of Sixteen worships Then is Jiva's Ten attainments are. |
2665. மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும் கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே. 10 |
2665: Love Lord and Sever Pasas Our Holy Nandi Once He loves, separation Knows not; Think of His Form And within you He melts; Enter into His Essence And see Him in your heart; For those who can do this, The seminal Karmas slumbering die; The Ego-Consciousness forever perishes. |
2666. தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப் பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில் தலைப்பட லாகும் தருமமும் தானே. 11 |
2666: Lord can be Reached by Earnest Seeking Reach you may Our Holy One that is Truth Perfect; Sunder Pasas strong and away cast them; Seek Him firm and think constant within; Reached then shall be The Holy One that is Dharma. |
2667. நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச் சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத் தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும் கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே. 12 |
2667: Think of Him and He Thinks of You Think of Him, And He thinks of those who think of Him; Think of Him, the radiance that is, Of the Flower that blooms in the Divine Fount within; Smaller than the split grain may they be, But if firm they hold Him, Great they shall sure be. |
2668. தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னை விலக்குறின் மேவை விதியென்றும் கொள்க அனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானை நினைப்புறு வார்பத்தி தேடிக் கொள்வாரே. 13 |
2668: In Seeking be not Discouraged by Initial Failures When you seek to reach the Lord And have a miss, Take it as the work of your evil Karma in the past, And so persevere in your devotion fervent; You shall at last reach the Primal Lord. |
2669. நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி நிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித் திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளே புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே. 14 |
2669: How Lord Enters Within Thinking of Lord Their inconstancy lost; Uniting in Lord Their existence lost; In their thoughts Their ego lost; Thus he entered Showing the Way Illumined. |
2670. வந்த மரகத மாணிக்க ரேகைபோல் சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம் இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே. 15 |
2670: Holy Guru Shows the Light in Eye-Brow Center Unto a lustrous ray of red gem On to a green stone set Is the Holy Guru's Jnana precept; That ray in the eye-brow Center is; It is the Light within the Light Resplendent. |
2671. உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க் கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது மண்ணு நீரனல் காலொடு வானுமாய் விண்ணு மின்றி வெளியானோர் மேனியே. 16 |
2671: God's Form As mouth, eye, body and life The Yoga-God is; Beyond earth, water, fire, wind and sky Void His Form is. |
2672. பரசு பதியென்று பார்முழு தெல்லாம் பரசிவன் ஆணை நடக்கும் பாதியால் பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு உரிய பதியும்பா ராக்கி நின்றானே. 17 |
2672: His Love for Sakti and His Devotees Praise Him as your Pati (Lord) In all Worlds Parasiva's writ runns; His one half to the Great Grace lends; The other half to His devotees gave For their goal to reach; He who this world fashioned. |
2673. அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில் தம்பர மல்லது தாமறியோம் என்பர் உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே. 18 |
2673: By Grace He Can Be Seen He is the Lord of Heavens, By the vast spatial glades surrounded; Except Him we know Param (supreme) none; Of the Celestials, Vanavas and Dhanavas, None have seen Him ever; Only those who received His Grace Have seen Him forever. |
2674. கோவணங் கும்படி கோவண மாகிப்பின் நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான் தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம் போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே. 19 |
2674: Grace Gives Clear Vision He made Jivas renounce That they the Lord adore; He made them praise Him in words meek; That He the Nandi His Grace confers; No more the other Gods we adore; Our vision is clear now; We became the Object For other Jivas to seek and worship. |
3. பிரணவ சமாதி |
3 PRANAVA SAMADHI |
2675. தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை பாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண் சூலித்த முத்திரை ஆங்கதிற்காரணம் மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே. 1 |
2675: Articulate Pranava is Siva's Form; Inarticulate Pranava Sakti's Form The Sthula (articulate) Pranava (Aum) Is the mighty key-word to Bliss of Manifestness (Svarupa) The Sukshma (inarticulate) Pranava Is Sakti's Divine Manifestness (Svarupa) The Mudra (Jnana) is the Cause of that Manifestness The Pranava aloft is the Vedanta Highway. |
2676. ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே. 2 |
2676: Greatness of Aum Aum is the one Word Supreme; Aum is the Form-Formless; Aum is the Infinite Diversity; Aum is Siddhi and Mukti radiant. |
2677. ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே. 3 |
2677: In Aum Jiva, Para and Siva Merge In Aum arose the elements five; In Aum arose the creation entire; In the atita (finite) of Aum The three Jivas merged; Aum is the Form Of Jiva, Para and Siva in union. |
2678. வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும் அருக்கம் சராசரம் ஆகும் உலகில் தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே. 4 |
2678: Aum is Bliss of Brahman, the Universe and the Adharas That letter-cluster (Aum made up of letters A-U-M) Is the Bliss of Brahman; The Subtle One As visible creation vast expands; The Adharas, all, comprise its Form; Thus is it Known to Jnanis of knowledge vast. |
2679. மலையும் மனோபவம் மருள்வன ஆவன நிலையில் தரிசனம் தீப நெறியாம் தலமும் குலமும் தவம்சித்த மாகும் நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே. 5 |
2679: Goodly Teaching of Sanmarga My despairing thoughts Are in confusion thrown; The steady thoughts Lead to vision clear of Light Divine; The steadfast mind Is the place, environs and devotion appropriate; Goodly indeed is Upadesa (teaching) of Sanmarga (Jnana). |
2680. சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்கு ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற் கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே. 6 |
26803: Ascending Order to Finite Goal Within To vision the Sixteen-Petalled Center within is Sodasa It is the Way of Sanmargis; Beyond is the end of Nine centers,* Still beyond is Pranava Ascending further beyond is the End Finite, Of Jnana (Knowledge) and Jneya (Known) in one. |
4. ஒளி. |
4 LIGHT |
2681. ஒளியை அறியில் உருவும் ஒளியும் ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக உடனிருந் தானே. 1 |
2681: Know Light Within Know the Light, your Form becomes Light; Know the Hidden Form; you that Form become; Know the Light's Form; you that Light become; That Light within you to melt, He in love stands. |
2682. புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும் அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும் பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலே இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே. 2 |
2682: That Light Dispels Soul's Darkness Easy to enter the Universe of Eight;* That spreading Light of immense vastness Dispells the Primordial darkness entire; In the Mystic Lotus within as day-light it spreads; Dispelling contending Pasas, Was my Lord there seated. |
2683. விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன் துளங்கொளி பெற்றன சோதி யருள வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு களங்கொளி செய்து கலந்து நின்றானே. 3 |
2683: The Light Within is the Source of All Light The luminaries Fire, Sun and Moon Their luminousness received by Grace of Divine Light; The Light that gave that Light Is a Mighty Light of Effulgence Immense; That Light dispelling my darkness, In me stood into oneness suffused. |
2684. இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள் வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே. 4 |
2684: Lord's Form is Light The Lord is the Effulgent Light, Birth He has none; The luminous sun and moon are His eyes; The lustrous fire is His Fore-Head Eye; Thus is His Resplendent Form of dazzling Light. |
2685. மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம் பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம் நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும் மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே. 5 |
2685: That Light Engrosses the Light of the Five Elements Below that Light Above Is the wind, earth, fire, sky and water; Rousing the Light (of Kundalini) within You shall in the astral sphere be; There indeed is the one Light That engrosses the lights of elements five. |
2686. மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும் உன்னிய வாறுஒளி ஒத்தது தானே. 6 |
2686: The Light Within is the Blending of All Lights-Jnana, Siva and Pranava That Light within Is pure as light of lightning; It is Light that is great and red; It is the Light of Param That beams Jnana; It is the Light of Adharas six ascended, It is the Light born of constant thought on Pure Word (Aum) It is the Light that is blended of these lights all. |
2667. விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும் உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற வளங்கொளி எங்கும் மருவிநின் றானே. 7 |
2687: The Little Light Within Points to the Effulgent Light The Effulgent Light stands as a sparkling light concealed That ever to the shining Lord points; It is the light of the heart; It is the rich light that within the body pulsates Pervading all, -Thus did the Lord as Light stand. |
2688. விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும் துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான் அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும் களங்கொளி ஈசன் கருத்தது தானே. 8 |
2688: Divine Light Devours Soul's Darkness Luminous is that Light; It is Light that devours Soul's darkness; It is Light of those who adore Him in Jnana Light; He devours the poison that with ambrosia arises From the milky seas And holds it in His throat ever; Unto it, is His Light too. |
2689. இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன் துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி உளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே. 9 |
2689: When the Lights of Siva and Sakti Blend in Jiva Light As unto the Light of Lord That in Him reposes; Is the Light of His Sakti Grace, When the three lights Sun, Moon and Fire Within shines by Yoga Way, The Lord, indeed, nears you, As one Light in your inner Light. |
2690. உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன் வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே. 10 |
2690: Lord's Light and Jiva's Light Merge Within The Light within is but Jiva; The Lord too who stood within was a gemly Light Effulgent; Flashing as lightning in the astral sphere, That Light with Sakti's Light and Jiva's Light into one merged. |
2691. விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக் களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே. 11 |
2691: Dancing in the Darkness of Pasa, Siva Light Enters Ummara Sakti The Lord that is Light Effulgent, Entering the dark arena of Pasa Dances as Light in that darkness; As the Forehead-Eyed God thus dances, He as Light Effulgent in Ummara Sakti merged. |
2692. போது கருங்குழற் போனவர் தூதிடை ஆதி பரத்தை அமரர் பிரானொடும் சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே. 12 |
2692: Siva's Light Becomes Sakti's Light of Grace Those who thus went by the Secret Way of Yoga, Reached Sakti of dark fragrant tresses; Primal Parai She is; One with Lord of Celestial's Light She is; -The Light beyond the Pure Void; That Light of Her forever dispelled Pasa's creeping darkness. |
2693. உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல் கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில் விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே. 13 |
2693: Even Sceptics Can Reach that Light if they Seek in Devotion "God there is; God there is none" Thus the men of world diverse hold; Will they who hold "Primal there is none," Ever reach Siva State? Even they who say, "We saw not God" If in devotion stand, He as Light Effulgent in them is; He the Light of Astral Sphere (Chidambaram) within. |
2694. சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே படருறு காட்சிப் பகலவன் ஈசன் அடருறு மாயையின் ஆரிருள் வீசில் உடலுறு ஞாலத் துறவியின் ஆமே. 14 |
2694: He Who Receives Siva's Light Becomes Jivan Mukta, Rid of Mayaic Darkness The light Effulgent that glows afar Is the Lord that spreads His beams as unto the Sun; When He the Maya's darkness dispells, Jiva in this body, a Jnani-Renunciate becomes (Jivan Mukta). |
2695. ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன் அளிபவ ளச்சொம்பொன் ஆதிப் பிரானும் களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி ஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே. 15 |
2695: Jiva Purified by Siva's Light Unites in Him His Holy Form is of shimmering coral-hue; He wears the holy ashes pure white; He is crimson as pure gold and coral ripe; He is the Primal Lord; When I, dispelled of my darkness, Shone as coral red, He, the Dancing Lord, In me in union stood. |
2696. ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்ற தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர் பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற வாசம்ஒன் றாமலர் போன்றது தானே. 16 |
2696: Jiva then Blossoms as Divine Flower In the Heavens stood Lord; The Celestials, too, stood there; Yet they knew Him not, And bewildered ever stand; When Pasa's desires And the odor of Karma Past Together leave, The Jiva as a Flower of Divine blossoms. |
2697.தானே யிருக்கும் அவற்றில் தலைவனும் தானே யிருக்கும் அவனென நண்ணிடும் வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப் பானாய் இருக்கப் பரவலும் ஆமே. 17 |
2697: Seek Himself as Yourself Himself as Lord In all things, He alone is; Himself is Yourself Thus you seek Him; The very Heaven is He in this vast earth; Sweet is He; May you Him adore. |
5. தூல பஞ்சாக்கரம் |
5 STHULA (ARTICULATE) PANCHAKSHARA |
2698. ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும் ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின் ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே. 1 |
2698: Fifty Letters Become Five The letters Fifty are Vedas all; The letters Fifty are Agamas all; When the secret of letters Fifty is known, The Fifty letters, Five Letters Became. |
2699. அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி உகார முதலாக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி நகார முதலாகும் நந்திதன் நாமமே. 2 |
2699: Fifty Letters Became Fifty-One With the letter "A" intoned in commencement, The letters Fifty, Fifty-One became; With letter "U" intoned high with letter "A", And with letter "M", it (A&U&M as AUM) ended; And again with letter "N" rising, It became Nandi's name "Aum Nama Sivaya." |
2700. அகராதி ஈரெண் கலந்த பரையும் உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன் சிகராதி தான்சிவ வேதமே கோணம் நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே. 3 |
2700: Seek the Seminal Mantra Nama Sivaya In the sixteen letters commencing with "A" (Of the Shodasa Flower within*) Is the Parai (Sakti); In the Unmani Sakti beginning with "U" Is the light of Lord within; The Mantra commencing with letter "Si" (Sivaya Nama) Is Siva and Vedas all; With letter "Na" commencing That order reversed Is Nama Sivaya; That verily is the seminal Mantra; That Mantra do seek. |
2701. வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி ஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வாய்த் தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல் ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே. 4 |
2701: How Aum and the Five Letters are Distributed in the Six Centers In the six Adharas (centers) within Are distributed the Five Letters and Aum; That comprise Aum Nama Sivaya (Na, Ma, Si, Va, Ya); In the Muladhara is Na In the Svadhishtana is Ma In the Navel Center is Si In the Heart Center is Va In the Throat Center is Ya In the Eye-brow Center is Aum. |
2702. கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக் கரணங்கள் விட்டுயிர் தானெழும் போது மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும் அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே. 5 |
2702: The Five Letters are the Life's Refuge When the seven beams of Prana in fury rise, When the four cognitive senses, their leave take, And as Death's Hand stretched and seizes, Life ebbs away; Then shall the Five Letters above the Soul's refuge be. |
2703. ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில் ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார் சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும் வாயுறு ஓதி வழுத்தலும் ஆமே. 6 |
2703: Chant Five Letters at Dawn and Dusk When the Sun and the Moon rise, They know not the mantra to chant and muse; Well may they then chant full-mouthed The Holy Mantra, Five-Lettered, Wholesome, and praise the Lord; -The Mantra that is so sacred to Sakti Who with Siva stands. |
2704. தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும் வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர் துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே. 7 |
2704: Chant Sivaya Nama in God-Love Chant that mantra Sivaya Nama once, Your heart welling up in God-Love; Then will transparent ambrosia within you well up; They who seek not that pure ambrosia to drink Will be unto bubbles of a water-fall, That know rest none from birth's whirl, ever. |
2705. குருவழி யாய குணங்களில் நின்று கருவழி யாய கணக்கை அறுக்க வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு அருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே. 8 |
2705: The Five Letters Will Close the Gateway to Birth Take to the Way the Guru showed, And blot out the reckoning of births; To them who seek to close the birth's cyclic way The Five-Letters alone show the Grace-Way. |
2706. வெறிக்க வினைத்துயிர் வந்திடும் போது செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும் குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும் குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே. 9 |
2706: Blessings of the Five Lettered Mantra-of Siva's Feet and Form When Karma's miseries harass you, Chant the Five-Lettered Mantra Of Nandi pervasive; If you thus seek Him, He, the Grace of His Holy Feet confers; Your devotion shall lead you to Siva Form. |
2707. நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று மஞ்சு தவழும் வடவரை மீதுரை அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. 10 |
2707: Siva's Five Letter Mantra is the Final Refuge Think of Him in your heart, Praise Him as "My Lord" When Death approaches you, say: "Lord, You alone are my Refuge;" Then will you receive The Grace of Lord in Letters Five seated, The Lord who resides In the snow-clad mountain of North (Kailas). |
2708. பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர் பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும் அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே. 11 |
2708: Letters Five Alone Can Dispel Darkness Knowing not the greatness Of our Lord's Letters Five, Will they ever dispel their darkness? Poor in spirit are they, (who think otherwise); They will to the nether world consigned be Surrounded by serpents of diverse species. |
6. சூக்கும பஞ்சாக்கரம் |
6 SUKSHMA (INARTICULATE) PANCHAKSHARA |
2709. எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த் தெளிய ஒதிச்சிவாயநம என்னும் குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே. 1 |
2709: Sivayanama is Alchemic In slighting terms they speak of our Lord; With thoughts centering on the Light And hearts melting in love Let them chant His name; With the alchemic pill of Sivaya Nama He will turn thy body gold. |
2710. சிவன்சத்தி சீவன் செறுமல மாயை அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச் சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே. 2 |
2710: Si-Va-Ya-Na-Ma Brings Union of Jiva With Siva-Sakti The Letters Si Va Ya Na Ma denote Siva, Sakti, Jiva, Mala and Maya respective; Chant it, for the five Pasas-Mala to disappear; When with Siva and Sakti, Jiva unites (That is when you say Si Va Ya) The harassing Pasas flee away. |
2711. சிவன்அரு ளாய சிவன்திரு நாமம் சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை சிவன்முத லாகச் சிறந்து நிரோதம் பவமது அகன்று பரசிவன் ஆமே. 3 |
2711: The Five Letters Denote the Five Relations in the Liberation Process The Five-lettered name of Siva (Sivayanama) Is Siva-Sakti (Grace); Si for Siva, Va for Sakti, Ya for Jiva, Na for Tirodayi and Ma for Maya (impure); Thus the Five Letters, five relations denote; As you chant with Si first (that is as Si Va Ya Na Ma) You are of Karmas freed; Births no more will be You shall Para-Siva become. |
2712. ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ் ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால் தீதில் சிவஞான யோகமே சித்திக்கும் ஓதும் சிவாயமலமற்ற உண்மையே. 4 |
2712: Siva-Jnana Comes of Si Va Ya Rid of malas denoted by "Na" and "Ma" And the primordial Anava too, By the Grace of Siva-Sakti Siva-Jnana pure will be; Repeated chant Si Va Ya; There verily is Truth of Mala-riddance. |
2713. நமாதி நனாதி திரோதாயி யாகித் தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச் சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே நமாதி சமாதி சிவமாதல் எண்ணவே. 5 |
2713: How Through Na Ma Si Va Ya Union in Jiva Occurs in Samadhi Na Ma and the rest (Na Ma Si Va Ya) Pervading Jiva in his five states of Consciousness Waking, dreaming and the rest, Stand forth as Tirodayi, the Sakti of Obfuscation (Verily) And She in turn leads to the Pure Sakti that leads to Grace, Then does Jiva reach the Final state of Turiya in Samadhi; Thus meditating on Na Ma and the rest, The Jiva unites in Siva. |
2714. அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில் ஒருவனை ஈன்றவர் உள்ளுறும் மாயை திரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும் அருவினை தீர்fப்பதும் அவ்வெழுத் தாமே. 6 |
2714: Chant Si Va Ya The Sakti that Grace confers, And the Lord with Her inseparate, Together as Siva-Sakti roused Jiva to life; When you contemplate on Si Va Ya; Then the Maya within and the rest of Malas three are rid; That Si Va Ya destroys the hard Karmas too. |
2715. சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச் சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள் சிவசிவ ஆகும் திருவருள் ஆமே. 7 |
2715: Chant Siva Siva and Receive Grace They who chant not "Siva Siva," Are from ignorance freed not Verily are they beings dumb; Do say "Siva Siva" Unintermittent and spontaneous, In the depths of your heart; They who thus chant Are in Siva Jnana Pure; Theirs shall be the Grace Divine. |
2716. சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே. 8 |
2716: "Siva Siva" Leads to Siva State They chant not "Siva Siva," Verily are they of evil Karma; Chant "Siva Siva" Your evil karmas per a Deva become; Yours shall be the Siva-State too. |
2717. நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப் பவமது தீரும் பரிசும்அது அற்றால் அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ. 9 |
2717: Chant Na Ma Si Va and End Birth Hold the letters, "Na Ma" in the tongue Take the letters "Si Va" into your thought; No more shall you be in existence entangled; Your goal too shall be reached; Ignorance will end, And with it the whirl of births too. |
7. அதிசூக்கும பஞ்சாக்கரம் |
7 ATI-SUKSHMA (SUPER SUBTLE) PANCHAKSHARA |
2718. சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே. 1 |
2718: Bliss From Si Va Ya Siva Siva Saying Si Va Ya Na Ma, Center your thoughts, All perils your vassals will be; Let the words Si Va Ya Siva Siva Fill your thoughts unceasing; Conquering all perils, Bliss there shall be. |
2719. செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம் அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு துஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே. 2 |
2719: Five-Lettered Holy Word Leads to Samadhi Penetrating the fiery Sphere of Sun And passing beyond into the sphere of cloud-laden Meru By the Adhara Way, He (the yogi) there in Samadhi slumbers; And then articulating the Holy Word He sees the Lord And is forever absorbed in His thought. |
2720. அங்கமும் ஆகம வேதமது ஓதினும் எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால் அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே. 3 |
2720: Chant "Si" and Cross the River of Life All that is spoken in Vedas, Vedangas and Agamas Are in my Lord's One Letter contained Freed of doubts, If that One letter "Si" is consummated, The boat of life reaches the lovely shore across. |
2721. பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர் எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே. 4 |
2721: The Five Letters Unwrites Fate's Letters Ripe they hang The Letters Five In Vedas ancient; They know not the Way To Slumber-in-Waking; "Letters we know," they say Witless are they; They know not the Letter That their Fate's Letter unwrites. |
8.1 திருக்கூத்து தரிசனம் |
8 DARSHAN OF HOLY DANCE |
2722. எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. 1 |
2722: Siva's Sport Divine Everywhere is the Holy Form; Everywhere is Siva-Sakti; Everywhere is Chidambaram; Everywhere is Divine Dance; As everywhere Siva is, Everywhere Siva's Grace is All, all, His Sport Divine. |
2723. சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச் சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப் பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யார்அறி வாரே. 2 |
2723: Siva's Five Dances He is Chit-Para of Divine Light, He dances the Dance of Bliss (Ananda Dance); He is Nada that is "Aum" He dances the Dance of Beauty (Sundara Dance); He dances in Golden Hall (Golden Dance); He dances in the Golden Tillai (Golden Tillai Dance); He dances the Dance Wondrous (Atbudha Dance); Who knows Him ever? |
8.2 சிவானந்தக் கூத்து |
4 SIVANANDA (SIVA-BLISS) DANCE |
2724. தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல் தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர் ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே. 3 |
2724: Ananda Dance is Honey-Sweet Endless is She, Sakti of abiding Bliss; With Her He dances the Ananda Dance Honey-sweet it is; You have witnessed it; And having witnessed it, Dance transcending knowledge all; You, then, become the arena For Lord's Ananda Dance to perform. |
2725. ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம் ஆனந்தம் ஆக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே. 4 |
2725: It is Bliss Bliss is His Dance Arena; Bliss the Song's melody; Bliss the music's refrain; Bliss the musical organs; Bliss for the creation entire, Bliss too for Lord, Who the Ananda Dance dances. |
2726. ஒளியாம் பரமாம் உளதாம் பரமும் அளியார் சிவகாமி யாகும் சமயக் களியார் பரமும் கருதுறை யந்தக் தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே. 5 |
2726: It is End of Jnana The Param that is Light The Param that Jiva unites in, The Param that is Sivakami Who as Sakti in Grace abounds; And the bliss of faiths all, -Are all attained, When Sivananda Dance witnessed, The Dance that is the end of Knowledge Pure. |
2727. ஆன நடம்ஐந்து அகள சகளத்தர் ஆன நடமாடி ஐங்கரு மத்தாக ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே தேன்மொழி பாகன் திருநட மாடுமே. 6 |
2727: Through Five Dances Siva Performs Five Acts Five are the dances That He the Form-Formless performs; The Five dances He dances The Five acts to perform; The Five acts He performs With Sakti-Grace in Him; And so the Lord dances with Sakti That is of honey-speech. |
2728. பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட தாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்து ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே. 7 |
2728: Siva's Cosmic Sway The Universe of Elements Five, The Universe of Elements Other, The Universe of Bhoga, The Universe of Yoga, The Universe of Time, The Universe of Mukti, The Universe of Passions The Universe of Appetites -Over these universes That He created, Siva His sway holds, The Five Acts performing; Alone Seated as Tatpara, In the Cosmos Entire-Brahmanda. |
2729. வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக் கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப் பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே. 8 |
2729: Jnana-Ananda Dance The Vedas danced, the Agamas danced; The melodies danced, the seven universes danced; The elements danced, and the worlds entire danced; With Nada Sakti the Lord danced, The Dance of Divine Knowledge-Bliss (Jnana-Ananda). |
2730. பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில் வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில் ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப் போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே. 9 |
2730: Siddha-Lord Dances In the elements Five, In the senses Five, In the sense organs Five, In the Vedas and Agamas together Five, (In Kala, and Kala (Time's Eternity)) In the Higher Siva Tattvas Five, (Suddha Vidya, Iswaram, Sadakyam, Sakti, Sivam) In all these, intermingling The Great Siddha-Lord dances. |
2731. தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர் மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள் தாபதர் சத்தர் சமயஞ் சராசரம் யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே. 10 |
2731: When the Lord Danced The Devas, Asuras, Humans, Siddhas and Vidyadharas, The Primal Three, the Three-and-thirty gods, The Rishis seven, the Faiths several, And the creation all, movable and immovable, -All these danced, When my Lord danced. |
8.3 சுந்தரக் கூத்து |
4 SUNDARA (BEAUTY) DANCE |
2732. அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால் உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல் கண்டம் கரியான் கருணை திருவுருக் கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே. 11 |
2732: Dance in the Beyond as Compassion Embodied Beyond, beyond, the universes seven, High above Sakti and Sadasiva, The dark-throated Lord, As compassion embodied, Danced in rapture For Uma there to witness. |
2733. கொடிகட்டி பாண்டுரங் கோடுசங் காரம் நடம் எட்டோ டு ஐந்துஆறு நாடியுள் நாடும் திடம்உற்று ஏழும்தேவ தாருவும் தில்லை வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே. 12 |
2733: The Dances of Siva, Eight and Five-Witnessed in Six Adharas Kodukkotti, Pandarangam, Kodu, Samharam and others, -These Eight dances He danced, The Five dances too He danced, All these you witness in the Nadis (Adharas) six; In the yogic way; He danced too in the forests of Deva-daru, And in Tillai and in Alavanam -He the King Supreme. |
2734. பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம் பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன் பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம் பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே. 13 |
2734: Siva Dances Through Cosmos At the crest of Cosmos of galaxies vast (Paramandam) Are the Holy Feet of Parasakti; At the crest of Cosmos Is the radiant Light of Isa Permeating the Cosmos Is the expansive Nada; There through the Cosmos vast Does the Paran dance unceasing. |
2735. அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில் தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில் சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல் பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே. 14 |
2735: He Dances in Sushumna and in Jnana that Arises in Yoga In Yoga That unto elephant goad subdues the senses, Is Bodha (Jnana); There arises in rhythmic cadence The drum-beat of Thom-Theem; To that, Sankaran, in accord, dance Within the central Sushumna Nadi; When He thus dances, He enters in you, And there abides, never to leave ever after. |
2736. ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக் கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே. 15 |
2736: Siva Danced Away From Within Jiva to Jnana He danced, Jivas to delight; He danced nine dances, The nine Saktis to delight; He danced in forests; He danced in the thoughts of His devotees; He danced in the junction of Sushumna within; He danced in Jnana Endless; Thus He danced away, He, my Lord. |
2737. சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும் முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும் சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும் சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே. 16 |
2737: Other Places Where He Danced Saktis Five, Siva forms Five, Muktis Eight, Primal States Eight, Siddhis Eight, Siva States Eight, Suddhis Eight -In all these Lord dances His ancient dance. |
2738. மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும் தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே. 17 |
2738: Categories at the Feet of Dancing Siva The clouds seven, the sea-girt continents seven, The bodies seven, the Siva-Suns seven, The appetites seven, the alleviations (Santis) seven, All these contained are, At the Feet of (Dancing) Nandi. |
8.4 பொற்பதிக் கூத்து |
GOLDEN HALL DANCE |
2739. தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில் அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும் ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. 18 |
2739: The Uncreated Being Dances In south, north, east, west and crest In the five faces wondrous therein, In the void within void of peerless Bliss, The Tat-Para dances the dance rare. |
2740. அடிஆர் பவரே அடியவர் ஆமால் அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே அடியார் அரனடி ஆனந்தம் கண்டோ ர் அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர். 19 |
2740: He Dances, for His Devotees to Witness Holy Devotees are they, Who bliss of Hara's Feet attained; Holy Devotees are they, Who in Hara entered; Holy Devotees are they, Who to Siva's Holy Feet cling; Holy Devotees are they, Who witnessed true The Lord's dance in golden Hall (of the astral sphere). |
2741. அடங்காத என்னை அடக்கி அடிவைத்து இடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டு நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன் படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே. 20 |
2741: Effect of Witnessing Siva Dance in Golden Hall Uncontrolled was I; He controlled me; He blessed me with His Holy Feet; He immersed me in Transcendental Bliss immense Thus He dances, Our Nandi, The goodly dancer of Jnana Dance; Unto a picture He made me sit still And in me abided. |
2742. உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச் செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச் சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. 21 |
2742: In Golden Hall He Dances in Intimacy of Jiva In High Heaven He dances; In Excellence He dances; In the Red-Gold Hall The Valiant Sentinel dances, In the intimacy of Jiva He dances; As Tat-Para He dances; Him I sought in rapture divine And in love adored. |
2743. மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப் பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச் சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. 22 |
2743: Siva-Bliss Dance Beyond Description He dances as a Red Ruby within, He dances in the flourishing Tillai; He dances in the Jewelled Hall, He dances with matted locks; He dances in the distant Light Divine; He dances in Sivananda Bliss; He dances the Pure Gold dance; Who shall describe Him indeed that thus dances. |
2744. விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும் தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும் செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள் அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே. 23 |
2744: Dance Emotions of Devotees They sob, they fear, they fall, they rise' Their body exhausted, Themselves they are unaware of, Their powers lost; Thus are they in the Holy Temple dance; They who in love adore The Holy Feet of Lord, Flower-like and golden. |
2745. தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள் வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன் ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே. 24 |
2745: When They Witness Holy Dance World-seeking you no more hanker after; No more bewildered are your thoughts; Sorrows harass not your body within; Your breath will be trained in the Yogic way; Your senses controlled from straying away; All desires are rid; The heart elates in bliss-seeking; Thus it is, When the Holy Dance they witness. |
2746. காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக் கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி நாளுற அம்பலத் தேயாடும் நாதனே. 25 |
2746: How He Dances in Golden Hall He dances with Kali; He dances in the Golden Hall; He dances with Demons; He dances in the world; He dances in water, fire, wind and sky He dances in the Temple Holy day after day He, the Lord Supreme. |
2747. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல் கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும் சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு ஏறும் கழுமுனை இவைசிவ பூமியே. 26 |
2747: Siva's Spheres of Dance Within The central spinal column that is Meru The Nadis, Ida (Left) and Pingala (Right), The Jiva's delta-shaped Muladhara The Sushumna Cavity that is unto Tillai Forest Where the cool (southerly) breeze from Mount Malaya wafts All these alike are Siva's Spheres of Dance. |
2748. பூதல மேருப் புறத்தான தெக்கணம் ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம் பாதி மதியோன் பயில்திரு அம்பலம் ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே. 27 |
2748: Mystic Frontiers of our Universe The Land of Mount Meru, And the Land of South that lies beyond it Are the Ida, Pingala; The Holy Hall where the Lord of Crescent Moon dances, Is the Sushumna -Thus lie the frontiers of this universe vast. |
8.5 பொற்றில்லைக்கூத்து |
GOLDEN TILLAI DANCE |
2749. அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப் பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத் தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 28 |
2749: Inner Meaning of Golden Tillai Dance The seven universes as His golden abode, The five elements, sky and the rest as pedestal The central Kundalini Sakti as Divine Hall Thus in rapture He danced, He that is Cosmic Light. |
2750. குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம் சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து புரானந்த போகனாய்ப் பூவையும் தானும் நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே. 29 |
2750: Dance in the South In the Center the Guru indicated, Within the head, He as Bliss danced; Then moving South In renewed ecstasy espousing Sakti, He with Her in Eternal Bliss danced. |
2751. ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப் பாதி மதியாடப் பாரண்ட மீதாட நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே. 30 |
2751: Nadanta Dance The Primal Para danced; The Fire in His hand danced; The Holy matted lock danced; In intoxication of joy He danced; The crescent moon danced; The heavenly orbs danced; Merging in Nada He danced, The Dance of Nadanta, heavenly. |
2752. கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம் அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம் செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால் உம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே. 31 |
2752: Dance Cosmic There in the Holy Hall the Lord danced, The Jivas to adore; The dance He dances, Is the Dance Cosmic; It is the dance that takes you To Truth of Siva's realm; There verily is the limit of Mauna Jnana Bliss. |
2753. மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம் பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே. 32 |
2753: Dance Ensemble The universes seven; The worlds thrice seven; The religions a hundred and eight -That the path to God show; The heavenly states of Bliss four, -Nada, Nadanta, Natana, Natananta- The Sakti that is His Half; With them all, Para's Holy Feet danced and danced. |
2754. இடைபிங் கலைஇம வானோடு இலங்கை நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை கடவும் திலைவனம் கைகண்ட மூலம் படர்பொன்றி என்னும் பரமாம் பரமே. 33 |
2754: Pervasive Dance in the Mystic Centers Idakalai,* Pingalai,* The delta-shaped Muladhara The Central spinal column Meru, Where (Kundalini) Sakti is The Sushumna cavity within That is unto the Tillai Forest -In all these the Primal One pervaded, He that is Paraparam. |
2755. ஈறான கன்னி குமரியே காவிரி வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள் பேறான வேதா கமமே பிறத்தலான் மாறாத தென்திசை வையகம் சுத்தமே. 34 |
2755: South the Holy Land At the Land's End is KanyaKumari; And then the Kaveri And other holy waters The nine "theerthas" comprise; And the seven sacred hills too; In that land are born the Veda-Agamas; Thus blessed, The South is the Holy Land indeed. |
2756. நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி போதத்தில் ஆடி புவனம் முழுதாடும் தீதற்ற தேவாதி தேவர் பிரானே. 35 |
2756: Where He Dances Solo He dances in Nada He dances in the States Four* He dances in Veda He dances on the Fire's top He dances in Bodha, He dances in worlds all He the Blemishless One, The Lord of Celestials countless. |
2757. தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப் பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக் கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே. 36 |
2757: He Dances in Holy Ensemble He dances with the Celestials, He dances in the Holy Temple, He dances with the Gods Three, He dances with the assemblage of Munis, He dances in song, He dances in Parasakti He dances in Jivas He, the Lord of Dances. |
2758. ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும் கூறு சமயக் குருபரன் நானென்றும் தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே. 37 |
2758: Guru Para Dance in Holy Temple "I am the Lord of Six Ways to God, I am the Guru Supreme, religions speak of," Thus saying, He chose the Holy Temple in South*; And there in resplendence dances, With peer none to compare. |
2759. அம்பலம் ஆடரங் காக அதன்மீதே எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள் தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. 38 |
2759: Siva-State The Spaces Vast are His dance arena, Upon that my Paran dances; The radiance of His twin Feet Ascendes to heavens high, And reaches to Five-lettered Nada's point; He does descend to you and bless you, His Siva-State confer on you. |
2760. ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும் பாடிய பாட்டும் பலவான நட்டமும் கூடிய கோலம் குருபரன் கொண்டாடத் தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. 39 |
2760: Varied Dances And the dances varied, With it the foot-work And the jingle of the anklets And the songs sung And the Forms He assumed, -So, the Guru Para dances; Seek that dance within And your birth's cycle forever end. |
2761. இருதயம் தன்னில் எழுந்த பிராணன் கரசர ணாதி கலக்கும் படியே அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன் குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே. 40 |
2761: He Dances as Prana As Prana that in heart arises To permeate your hands and feet, And sense organs all, -Thus He dances In the arena of nine gems, He the Red-Ruby Dancer; As the Holy Guru He danced in rapture In places all. |
8.6 அற்புதக் கூத்து |
ATBUDHA (WONDER) DANCE |
2762. குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம் அருவுரு வாவது அந்த அருவே திரிபுரை யாகித் திகழ்தரு வாளும் உருவரு வாகும் உமையவள் தானே 41 |
2762: Dance of the Form-Formless (Sadasiva) The Form that dances Is Guru's Form, It is in sooth Formless; That Formless One shines As Sakti Tiripurai as well; She verily is Uma That is Form-Formless. |
2763. திருவழி யாவது சிற்றம் பலத்தே குருவடி வுள்ளாக்குனிக்கும் உருவே உருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு அருள்வழி யாவதும் அவ்வழி தானே. 42 |
2763: The Form-Formless Dancer is Gurupara The Holy Way is Form-Formless In the Holy Temple of Chittambala, The Form that dances there Is the Form of Guru within, They who full know, He is Form-Formless They receive His Grace Divine That Jnana Way. |
2764. நீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம் ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து ஆடும் இடந்திரு அம்பலந் தானே. 43 |
2764: Nadanta Dance in Prana Source From within the head In twelve finger-measure The Prana breath rises high, That highway you seek; That the Place where Our Lord of Nadanta dances; That verily is the Holy Temple. |
2765. வளிமேகம் மின்வில்லு வானகஓசை தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல் களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய் ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே. 44 |
2765: Light-Form of the Divine Dancer The wind, the cloud, lightning, rainbow, sky and thunder All these in space arise; Unto it, Within the rapturous rays blended of Adharas six, And without them too, separate, He as Form of Light stands, In body concealed. |
2766. தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும் ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம் மாயைமா மாயை கடந்துநின் றார்காண நாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே. 45 |
2766: Dance Witnessed by Those Who Transcend Maya and Mamaya In the elements five, and directions eight, And above and below, Beyond the intelligent senses Is Bliss Divine; For them to witness That transcends Maya and Mamaya The Lord stands and ever dances. |
2767. கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும் கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம் கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக் கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே. 46 |
2767: In Dance Siva Blends The Dancer blends in Sakti of charming bracelets, The Dancer blends in blemishless Bliss, The Dancer blends in blemishless Jnana, The Dancer and His consort in Dance Blend. |
2768. இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம் அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே. 47 |
2768: Dance for Jiva's Redemption My Lord and His Sakti That His Half took Stood dancing; That I witnessed; For the countless Jivas That are veiled by Maya; As Redemption He stands, Dancing, dancing eternal. |
2769. சத்தி வடிவு சகல ஆனந்தமும் ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம் சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே. 48 |
2769: Bliss of Siva-Sakti Pair Dance The Form of Sakti is Bliss-All; Of equal Bliss is Uma's Form; Sakti's Form rising in Siva's Form As one merged and one dance performed; That peerless dance is bliss Perfect. |
2770. நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம் சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. 49 |
2770: Ajna Center is Astral Temple of Lord Straight within the fore-head Between the eye-brows Is the astral space vast; Peer, peer within there The luminous Mantra (Aum) will be; The place where they in yearning sought Him Is the place where He in yearning is; That verily is the Holy Temple of Chittambalam And there did I firm sit. |
2771. அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம் தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம் தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 50 |
2771: Seven Pedestals of Siva's Dance The universe vast, The Tattvas numerous, The Sadasiva, The Sushumna central, The Sakti Sathavi, The Sakti Sambhavi The Sakti Kundalini (That in Muladhara Plexus is) -These seven are Siva's pedestals; On them He dances He, the Being Transcendental. |
2772. மன்று நிறைந்த விளக்கொளி மாமலர் நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை சென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள நின்றது தான்நெடு மண்டல மாமே. 51 |
2772: The Light of Astral Flower in the Dance Theatre The shedding light Of that Astral Flower Within, Illumines the Dance Arena entire; Wondrous indeed that Flower is; Its petals four (in Muladhara) Into a hundred petals blossomed (in Sahasrathala) And into ten and two hundred worlds expanded, In the interminable spaces vast. |
2773. அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே. 52 |
2773: Septenary Centers of Cosmic Dance Seven Crores are the universes vast, Seven Crores are the life forms varied, Seven Crores the continents of the sea-girt world, Seven Crores the Lingas in directions eight These the Temples where His Cosmic Dance performed are. |
2774. ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன் ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண் மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே. 53 |
2774: Dance in Space The Space is His Body; The Muyalaka (Demon) is the Darkness in that space; The Directions eight are His spreading Hands, The loving eyes three Are the lights three (Sun, Moon and Fire); Thus He dances In the space arena, That is Body Cosmic. |
2775. அம்பல மாவது அகில சராசரம் அம்பல மாவது ஆதிப் பிரானடி அம்பல மாவது அப்புத்தீ மண்டலம் அம்பல மாவது அஞ்செழுத் தாமே. 54 |
2775: Holy Dance Theatre The Holy Dance arena is the creation countless; The Holy Dance arena is the Holy Feet of Lord; The Holy Dance arena is the sphere of Water and Fire, The Holy Dance arena is the Letter-Five, verily. |
2776. கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள் பாடிய வாறுஒரு பாண்டரங் காமே. 55 |
2776: Pandaranga Dance at the End of Dissolution The drums beat, the pipes played, "Aum", they hummed; The men danced, "My Primal Lord!" they said; The crowd of Ganas in serried ranks praised; The numerous Bhootas sang -Thus He danced the Pandaranga, -The Dance of Dissolution At end of Tiripurai* conflagration. |
2777. அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள் தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள் புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக் கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே. 56 |
2777: Who Witnesses Golden Temple Dance The Celestials in the universe And the Celestials Beyond, And the holy ones in the sea-girt world All, all, witnessed the Golden Temple dance Of the Lord of Lotus Feet, And that adoring Reached Siva-State. |
2778. புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல் களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம் துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும் ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. 57 |
2778: Rapturous Experience Flowing From Witnessing Holy Dance At the sight of tamarind Water in mouth wells up; As unto it, Are all those who witness the Holy Dance; They shed tears of joy; They melt in love of Lord; In their hearts, Ambrosial bliss of Divine Light wells up. |
2779. திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது உண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும் கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக் கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே. 58 |
2779: So too: They Who Hear of It They stagger, their sense lost, Drunk of Sivananda Bliss; They who still retain their senses, Frenzied become; Thus are they, Who the Divine Dance witnessed, In the Holy Arena praised by all; Even those who hear of it Are unto those who witness it; -All rapture is theirs too. |
2780. அங்கி தமருகம் அக்குமா லைபாசம் அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம் தங்குஉ பயந்தரு நீல மும்உடன் மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே. 59 |
2780: He Dances With Sakti With fire and drum, With Rudraksha garland and noose cord, With elephant's goad, trident and skull, With frightening blue throat where Jnana is, With Sakti for His inseparate partner, He dances the Dance Mighty. |
2781. ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக் கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி நீடிய நாதம் பராற்பர நேயத்தே ஆடிய நந்தி புறம்அகந் தானே. 60 |
2781: He Dances Inside and Outside the Heart With the accompaniments eleven That dance has, With anklet feet and drum in hand, The Nada reverberated, And reached unto Para-Para in High Heaven; The Holy Nandi that thus danced, Is verily inside your heart and outside too. |
2782. ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 61 |
2782: Dance of Divine Bliss The nine danced, The sixteen danced, The loving Faiths six danced, The seven melodies danced; The twenty and eight rhythmic beats danced; The Love (Sakti) too danced; He danced the Dance of Divine Bliss. |
2783. ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய் ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி ஏழிசை நாடகத் தேஇசைந் தானே. 62 |
2783: Dance of Seven Melodies As seven subtle melodies within the seven articulated, As the seven letters they denote, As one harmony in the seven musical notes, He descended and pervaded; In the seventh state beyond the six adharas That Jnana yoga crosses Is Aum Paranjothi, (the Divine Light) In the dance of seven melodies He danced. |
2784. மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய் மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய் மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியே மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே. 63 |
2784: Dance of Triple Pasa-Riddance-Mohanta Dance The three letters A, U and M (Aum) The five letters Na, Ma, Si, Va, Ya became; And as three hundred and sixty rays they became; Commencing from Muladhara that the waters hold In through the centers six (Adharas) and spheres three (Sun, Moon, Fire) That the triple Karanas their end may see, He in ancient Pasas Triple danced The Dance of Mohanta (Impurity-riddance). |
2785. தாமுடி வானவர் தம்முடி மேலுறை மாமணி ஈசன் மலரடித் தாளினை வாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங் காமணி ஞாலம் கடந்துநின் றானே. 64 |
2785: He is Kalpaka Tree that Grants All Wishes Above jewelled crowned heads of Celestials, Are the flowery Feet of Lord, A precious Jewel is He; He adorns the rising heart of His loving devotees; He is Tree Divine (Kalpaka Tharu) Of Heavenly glades; He transcends worlds all. |
2786. புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும் தெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை புரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும் எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே. 65 |
2786: When Creator Dances All Creation Dances When the Creator dances The Worlds He created dances; To the measure He dances in our knowledge, Our thoughts too dance; When He in heart endearing dances, The elements several too dance; Flaming as Divine Five He dances, That we witnessed in rapture surpassing. |
2787. ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள் ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர் ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின் ஆதி நடமாட லாம் அருட் சத்தியே. 66 |
2787: Primal Dance "The Primal Dance He danced" Thus say the holy ones; None saw Him dance That Primal Dance of yore; When that Primal Dance they witness, They dance indeed in the Grace Of that Primal Sakti. |
2788. ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து அன்புறு கோணம் அதிபதந்து ஆடிடத் துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே அன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே. 67 |
2788: He Danced in Asi Pada State In the nine centers mystic within The ninth state (Turiyatita) attained; In the center that is love His twin feet in Asi-Pada danced; And as the anguished Sakti within Him danced, My loving Father together with Her in rapture danced. |
2789. தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச் சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட வைத்த சராசரம் ஆட மறையாட அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 68 |
2789: Dance of Ananda (Bliss) The Tattvas danced; Sadasiva danced; The Thought danced; Siva-Sakti danced; The creation vast danced; the Vedas danced; The Lord too danced, The Dance of Ananda (Divine Bliss). |
2790. இருவருங் காண எழில்அம் பலத்தே உருவோடு அருவோடு ஒருபர ரூபமாய்த் திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன் அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே. 69 |
2790: He Danced for Rishis Patanjali and Vyagrapada In the splendorous Temple (of Chidambaram) He danced, For the two Rishis* to witness He danced, Form, Formless and as Cosmic Form, Within the Divine Grace of Sakti He danced, He the Siddha, the Ananda; As Form of Grace He stood and danced. |
2791. சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில் அவமாட ஆடாத அம்பரம் ஆட நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச் சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே. 70 |
2791: He Danced in Vedanta-Siddhanta Truth Siva danced, Sakti danced, The worldly desires danced; The space that dances not danced; The Tattva-Nadanta wondrous danced; When Siva danced inside of Truth, That indeed is Vedanta-Siddhanta. |
2792. நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும் தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து நாதப் பிரமம் சிவநாட மாமே. 71 |
2792: Siva Natana Nadanta that is end of Nada, (Principle of Sound) Bodhanta that is end of Bodha (Jnana) Vedanta that is end of Vedas Sivananda that is Bliss of Siva, Sadasivananda that is without end, In all these, He dances the Siva Natana He that is Nada Brahmam (Lord within the Sound-Principle). |
2793. சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத் தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத் தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும் தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே. 72 |
2793: Jnana Dance The perplexities of the Five Gods Rudra and the rest to end, The Jiva bonds standing afar, In prayer to depart The Holy Para by Himself dances everywhere; Holy indeed is the Jnana Dance That Sivananda Bliss fills. |
2794. கூடிநின் றானொடு காலத்துத் தேவர்கள் வீடநின் றான்விகிர் தா என்னும் நாமத்தைத் தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே. 73 |
2794: Dance in the Three Lights As One Supreme He stood in times of yore, Redeeming the Celestials countless, He earned the name of Lord (Vikirtha) He danced in the luminous Lights Three, He accepted me in His Grace. |
2795. நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பி பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர் நேதத் துவமும் அவற்றோடு நேதியும் பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே. 74 |
2795: He is Tattvas and Their Goal The Lord is the beginning of Vedas He is beyond Nada Tattvas; (Knowing this not,) They sought the pleasures of this world And in them revelled; He is the Tattvas in order placed And their Lord too at once; In that in separateness He commingling stood. |
2796. ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர் ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர் ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின் தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே. 75 |
2796: Dance of Bliss is Union in Siva "Bliss Bliss," they say; Witless are they; None know the Dance of Bliss; Having witnessed the Dance of Bliss, The Jiva its separateness ends, And in Divine Bliss unites. |
2797. திருந்துநல் சீஎன்று உதறிய கையும் அருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும் பொருந்த அமைப்பில் அவ்வென்ற பொற்கையும் திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே. 76 |
2797: Signification of Five-Lettered Mantra in Siva Dance "Leave this, be reformed," -Thus to Jivas, gestures one hand in letter "Si;" "Come unto me, Be united in me" -Thus to Tapasvins gestures another flower-like hand in letter "Va;" "Be in, Deva, fear not." Thus to Celestials gestures, the golden hand in letter "Ya." The hand that holds fire Gestures the letter "Na;" The foot on earth planted in dance Gestures the letter "Ma;" (Thus is the entire Five-Letter Mantra "Si Va Ya Na Ma" In Divine Dance denoted.) |
2798. மருவும் துடியுடன் மன்னிய வீச்சு மருவிய அப்பும் அனலுடன் கையும் கருவின் மிதித்த கமலப் பதமும் உருவில் சிவாய நமவென வோதே. 77 |
2798: Further Signification of Dance-Form in Relation to Five Letter Mantra The hand that holds the drum, (Si) The hand that sways, (Va) The hand that offers Refuge, (Ya) The hand that holds the blazing Fire, (Na) The lotus-foot, firm, on Anava Mala planted, (Ma) -Thus of the Divine Dance Form Si Va Ya Na Ma denotes. |
2799. அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம் அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம் அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே. 78 |
2799: Symbolism of Siva Dance Hara's drum is creation; Hara's hand gesturing protection is preservation; Hara's fire is dissolution; Hara's foot planted down is Obfuscation (Tirodayi) Hara's foot, raised in dance, is Grace (Redemption) abiding. |
2800. தீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளி கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள் மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப் பார்த்தனன் வேதங்கள் பாடினள் தானே. 79 |
2800: Sakti Witnesses Trinity Dance of Siva The flaming fire is He; The sparkling light within is He; The Sakti of youthful eyes saw Him dance; She saw the Three Gods merge Into the One Primal Being; In rapture She sang Vedas all. |
2801. நந்தியை எந்தையை ஞானத் தலைவனை மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே. 80 |
2801: Para Sundara Dance in the Beyond Nandi, My Father, Lord of Jnana, In the one-letter mantra Aum, He entered, Transcending it, In the spaces beyond He dances, In comeliness surpassing, How shall I describe that Para Sundara Dance! |
2802. சீய குருநந்தி திருஅம்ப லத்திலே ஆயுறு மேனியை யாரும் அறிகிலர் தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை ஆயுறு மேனி அணைபுக லாமே. 81 |
2802: Form of Siva A lion-hearted Guru is Nandi, In the Holy Temple He does dance; None know His Form divine; Fiery red smeared white it is; They who see His Form Reach the haven of Refuge. |
2803. தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சை ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள் ஆனால் அரனடி நேயத்த தாமே. 82 |
2803: Sakti's Grace Dance Sakti in the Lord Stands as Tat-Parai; She forges the bond between Para and Jiva; Standing as Iccha, Jnana and Kriya She many acts performs; And when She, Her Grace lends You reach Hara's loving Feet. |
9. ஆகாசப் பேறு |
49 ATTAINMENT OF AKASA (SPACE) WITHIN |
2804. உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனை உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே. 1 |
2804: How Siva is Within The Lord is in our heart, As Aum is He there, As Fire is He there, As Order is He there, As Space in body is He there, He, the One Being. |
2805. பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால் குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன் பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன் அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே. 2 |
2805: How Siva is Without As the Earth vast, As the Universe vast, As the Void Beyond, -Thus is the Lord pervasiveness all; Vast indeed is His benevolence, His Feet support the world entire; Yet invisible is His Form, He the Primal Lord. |
2806. அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானே. 3 |
2806: Siva's Light Merges in Jiva's Light He is the Light Cosmic, He is the Light Beyond, He is the Light that mingles in the Light within; In the spreading light of space, That swallows Immensity Vast, My body-light merged; Shattering Existence's land-marks, all. |
2807. பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி அயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு உயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே. 4 |
2807: He as Light is Immanent in Brahma and Vishnu In the delight of the maiden's union Is the sparkling light of the Primal One; Immanent in Brahma and Vishnu it was, Yet they knew it not (and contending stood); Then He revealed Himself to them As Light Divine, Flaming from earth to heaven. |
2808. அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும் பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும் அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள் பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே. 5 |
2808: When Siva's Light is Reached The Light Transcendental Is knowledge beyond knowledge; When in it merge in silentness In the Lights Three (within) that are mighty, Then is Siva reached; If His Feet there you leave not, Long, long may you be. |
2809. ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன் ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம் ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. 6 |
2809: He Fills Space and Outer-Space He fills the space; He is the darling of Celestials; He wears the serpent; Having filled the space He stands as outer-space He the Fire-Hued. |
2810. உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது குயில்கொண்ட பேதை குலாவி உலாவி வெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே. 7 |
2810: In Kundalini Yoga Jiva's Thought Merges in Space As you breathe in the Yogic Way, You reach the Inner Light, That is the breath of worlds all; The Damsel in the Muladhara Then rises and upward ascends, Spreading Her day-light brilliance, And thus uplifted, My thoughts in space within merged. |
2811. நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி நணுகிய மின்னொளி சோதி வெளியைப் பணியின் அமுதம் பருகலும் ஆமே. 8 |
2811: Drink of Ambrosia in Space Move close to Lord, He leaves you not; Move close to world, He leaves you alone; He the Supreme Lord Nandi; Move close to the Flashing Light Within the (mystic) astral space, And there adore; You may drink of Ambrosia Divine. |
2812. புறத்துளா காசம் புவனம் உலகம் அகத்துளா காசம்எம் ஆதி அறிவு சிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி சகத்துளா காசம் தானம்ச மாதியே. 9 |
2812: The Cosmic Space of Samadhi In the Outer Space is universe and the world, In the Inner Space is Primal Jnana, In the Space where Siva is is Light Resplendent In the Space that composes the Cosmos Is Samadhi's destination. |
10. ஞானோதயம் |
10 JNANODAYAM (DAWN OF JNANA) |
2813. மனசந் தியில்கண்ட மனநன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதனை வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே. 1 |
2813: Bliss in Sushupti and the Lord of Bliss in Turiya In the conjunction of Mind is the Waking State, Then the Dream, where bliss experienced be; Beyond it, is (sushupti) where Bliss experience certain is; Ascend still, there is the Void (Turiya) Where are only Two-Bliss and Lord of Bliss. |
2814. கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி எரியும் இளம்பிறை சூடும்எம் மானை அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால் கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே. 2 |
2814: Adore Lord as "Rare" and "Great" With His hands He peeled the elephant hide, In His hands He held the skull, On His crest He adorned the crescent moon, That Lord I adored; "Rare; Great is He;" Beyond that I knew nothing; Is He black or red? I have not seen. |
2815. மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன் தக்கார் உரைத்த தவநெறியே சென்று புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே. 3 |
2815: Enter Within and Follow Guru's Way When the Celestials above consumed ambrosia, He consumed poison; Follow the Way of Tapas, the holy men taught, And enter within; He will give you Jnana, that is pure gold; So, Siva's Feet do seek. |
2816. விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. 4 |
2816: Kindle Light Within Light Break open the Kundalini Light Light the Lamp within; Kindle the Light within that Light They who can thus brighten, The Light within the Light May reach the Feet of Him, Who is lustrous Lamp of Jnana. |
2817. தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின் தத்துவன் அங்கே தலைப்படுந் தானே. 5 |
2817: Know Truth of Tattva Jnana Where Tattvas are, the Lord of Tattvas is; Where Tattvas are not, the Lord of Tattvas is not; When you know the truth of Tattva Jnana, The Lord of Tattvas will there appear. |
2818. விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும் பசும்பொன் திகழும் படர்சடை மீதே குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே. 6 |
2818: Lord Stands in Astral Sphere of the Head In the astral space that holds Jnana True, Is the ambrosia that wells up from the fleshly body-mire; With the spreading matted locks of lustrous golden hue, With the haunting perfume of the ruddy (astral) flower, He stood. |
2819. முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின் கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம் ஒத்துஉயிர் அண்டத் துள் அமர் சோதியை எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே. 7 |
2819: Brilliance of Lord's Light Pearl, diamond, coral of three waters, Gold of purest fineness and gems, Into the brilliance of all these blended Is the Light of Lord that in heaven is; How else to describe that Divine Resplendence! |
2820. நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும் நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது நான்என்ற ஞான முதல்வனே நல்கினான் நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே. 8 |
2820: Lord Himself Removed "I" and "He" Distinction As I and He, I separate sought; And as I thus sought, "I and He are separate are not;" -Thus the Lord of Primal Jnana Himself granted, And then no more was the thought of I and He. |
2821. ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி ஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல் ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல் ஞானத்தின் நன்மோக நாதாந்த வேதமே. 9 |
2821: Jnana Way is the Truth The Jnana Way is the Nadanta Way, The Jnana Way is the Knowledge of Self, The Jnana Way of yoga is to center on Siva, The Jnana Way of Silentness Is the Veda Truth of Nadanta. |
2822. உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம் உய்யவல் லார்அறி வுள்அறி வாமே. 10 |
2822: Jnana is the Way to Liberation For them who seek liberation, Siva Jnana is the life-breath; For them who seek liberation, Siva God is the life-breath; For them who seek liberation Pranava is the center of divine union; The Lord is the Knowledge within Knowledge, Of those who liberation seek. |
2823. காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும் காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும் பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே. 11 |
2823: Lord is the Support Unfailing For those who can see Him He is the light of their eyes; For those who can see Him He is the ambrosia of the Oceans; Them who adore Him The Mighty Nandi never fails; To them alone who yearn for Him He stands as Support unfailing. |
2824. ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல் மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே. 12 |
2824: Even Celestials Are His Vassals Unto the sound within the one-letter word "Aum" is He He is the Great Truth the Celestials long for, He is the Flaming Light that shines afar, He is Our Lord, The Immortals who adore His Feet Are but beings to His inner service dovoted. |
11. சத்திய ஞானானந்தம் |
411 SATYA JNANANANDAM (SAT-CHIT-ANANDA) |
2825. எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே இப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்துத் தற்பரஞா னானந்தர் தானது வாகுமே. 1 |
2825: In the Seventh Void is Siva-Knowledge-Bliss All voids as void As all and nothing, The three Voids below, And the three Voids above, Seeking them, And knowing not what this Void is like, In that Supreme Bliss Is the Tat-Para Jnanananda; Siva-Knowledge-Bliss In that He and I one become. |
2826. தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல் நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும் அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 2 |
2826: Beyond Three Turiyas and the States They Lead to In the Turiya First is Thom-Pada State, In the Turiya Second is Tat-Pada State, In the Turiya Third is Asi-Pada State, Beyond is the Subtlety Immense that transcends Space There, the Holy Truth of Nandi, verily, is. |
2827. மன்னும் சத்தியாதி மணியொளி மாசோயை அன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றா மாறது இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம் பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே. 3 |
2827: The Fourth State of Bliss-A Blend of Six Attributes (Satya-Jnana-Ananda) Peerless the Bliss that in Satya-Jnana is, Incomparable is it to the light of pure gem's rays and the like; Unto Lily Blue, Purity, Beauty, Color, Fragrance and Radiance -These six, together blended, is That Bliss-State of Satya-Jnana. |
2828. சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால் உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம் வைத்த சொருபத்த சத்தி வருகுரு உய்த்த உடல்இவை உற்பலம் போலுமே. 4 |
2828: Sakti is Sat, Para Jnana is Chit and Siva is Ananda To speak of Sakti, Siva and Parajnana-Bliss Thus are they: Infinite high is Siva's Bliss (Ananda) Manifestness (Svarupa) is Sakti (Sat); Parajnana is that the Holy Guru to Jiva imparts (Chit); -All three together are unto the Flower Blended with Six attributes above (Sat-Chit-Ananda). |
2829. உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபை தரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில் மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின் சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே. 5 |
2829: Satya-Jnana-Bliss is Above the Three States Unto the Blue Lily blossom that is blended With Color, Purity, Beauty, Fragrance and Radiance, It is, When Jiva into Tat-Para blends; Then is the State of Siva-Manifestness (Svarupa) That is of the three States exalted, And in Him arose Satya-Jnana-Ananda. |
2830. நினையும் அளவில் நெகிழ வணங்கிப் புனையில் அவனைப் பொதியலும் ஆகும் எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டி நினையும் அளவில் நினைப்பித் தனனே. 6 |
2830: Lord is in the Farthest Stretches of Thought Think of Him as far as your thoughts stretch, Adore Him in melting love, Praise Him in songs melodious, Well may you envelop Him in your heart; Me too, My Lord Nandi, His Grace extending, Led to think of Him To the farthest reaches of my thought. |
2831. பாலொடு தேனும் பழத்துள் இரதமும் வாலிய பேரமு தாகும் மதுரமும் போலும் துரியம் பொடிபடி உள்புகச் சீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே. 7 |
2831: Sweetness of Satya-Jnana-Bliss Milk, honey, juice of fruit In ambrosial sweetness mixed; Unto it is when the triple States of Turiya-is crossed, And Jiva enters in Satya-Jnana-Ananda; It is a sweetness that permeates Every root of body's hair. |
2832. அமரத் துவம்கடந்து அண்டம் கடந்து தமரத்து நின்ற தனிமையன் ஈசன் பவளத்து முத்தும் பனிமொழி மாதர் துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே. 8 |
2832: Satya-Jnana-Ananda is Transcendental Transcending spheres of immortal Celestials, Transcending Cosmic Spaces, Transcending sphere of Nada, He stood, all by Himself-the Lord; Sakti with coral lips, pearly teeth and dewy-cool speech, And the unflickering Light of Parajnana Following, He stood (in Satya Jnana Ananda). |
2833. மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச் சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப் பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றும் சத்திய ஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே. 9 |
2833: How Jnanis Reach Satya-Jnana-Ananda The Tattvas six times six That in Eye-brow Center stand In Waking State, They left behind; They rid themselves of Malas; Were purified in Turiya that is Pure (Suddha); Freed of the bondage condition (Pedda) They became Siva; Beyond that they ascended into Satya-Jnana-Ananda (Truth-Knowledge-Bliss that is Sat-Chit-Ananda). They, the Jnanis True. |
2834. சிவமாய் அவமான மும்மலம் தீரப் பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத் தவமான சத்திய ஞானானந் தத்தே துவமார் துரியம் சொரூபம் தாமே. 10 |
2834: Svarupa (Manifestness) is in the Fourth Turiya State Jiva having become Siva And the triple Malas extinguished, Ascending into the Triple Voids In Desire and Not-desire ceased Pass into the holy state of Satya-Jnana-Ananda Bliss; There in that farthest Turiya of Jiva, The Self-illuminating Manifestness (Svarupa) is. |
12. சொரூப உதயம் |
412 SVARUPA UDAYAM (DAWN OF MANIFESTNESS) |
2835. பரம குரவன் பரம்எங்கு மாகித் திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று நிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம் அரிய துரியத்து அணைந்துநின் றானே. 1 |
2835: Parsivam is Immanent in Svarupa State The Holy Master, Parama Guru, As Para constant pervades interminably all; In that immanent state, Extends His Self-illuminating Manifestness; When Jiva the Final Turiya* State attains. |
2836. குலைக்கின்ற நீரின் குவலய நீரும் அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம் நிலத்திடை வானிடை நீண்டகன் றானை வரைந்து வலம்செயு மாறுஅறி யேனே. 2 |
2836: Parasivam is Pervasive In that primordial Flood of Waters (At the time of Dissolution) As Waters of the earth, the tempestuous Winds The Fire, the Sky and Earth He interminably extended in Space; I know not how to limit Him And thus adore Him. |
2837. அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள் எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர் தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறை பொங்கிநின் றான்புவ னாபதி தானே. 3 |
2837: Parasiva is Immanent in All Gods As thus He stood, The Gods Brahma, Vishnu and others Who wherever stood Praise Him as Lord Supreme; In them all He immanent stood, my peerless Lord, And beyond them too, He stood, He, the Lord of Worlds all. |
2838. சமயச் சுவடும் தனையறி யாமல் சுமையற்ற காமாதி காரணம் எட்டும் திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர் அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே. 4 |
2838: When Jnana Supreme is Attained Knowing not the foot-prints of Faith's Way, They the eight causal sins of greed, lust and others commit; They are egoity possessed; They who transcend these, And Jnana attain, Verily become Lord of Immortals in High Heavens. |
2839. மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உரு வாய்அது வேறாம் அதுபோல் அணுப்பரன் சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற ஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே. 5 |
2839: Svarupa Siva is of the Triple Turiyas and Beyond The three gods, Brahma, Vishnu, Rudra Are of the Primal One; Yet is He from them separate; Unto it, the Lord stands In the Turiyas triple- Jiva, Para and Siva (One and yet separate,) Thus say the scriptures sacred. |
2840. உருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும் கருவன்றி யேநின்று தான்கரு வாகும் அருவன்றி யேநின்ற மாயப் பிரானைக் குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே. 6 |
2840: Unless Lord Himself Reveals as Guru, He is Beyond Reach Form He has none, Yet Form He assumes; Birth He has none; Yet is He the seed of all births; Beyond Formlessness, too, He is, The elusive Lord; Unless Himself as Holy Guru reveals None, Him reach. |
2841. உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர் உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர் உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே. 7 |
2841: Meditation on God's Manifestness They who meditate on His Svarupa, See Him as the light within; They who meditate on His Svarupa, Will Timeless Eternity attain; They who meditate on His Svarupa, Will with Celestials be; Yet who does seek His Svarupa true In the world here below? |
2842. பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப் பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னைப் பரஞ்சோதி யுள்நான் படியப் படியப் பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே. 8 |
2842: Behold Transcendental Light (Param Jyoti) As I clung to the Lord that is Transcendental Light, The Transcendental Light in me entered and remained; And as I sank and sank into the Transcendental Light, I beheld the Transcendental Light, Himself aloud proclaiming. |
2943. சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி அரியன உற்பலம் ஆமாறு போல மருவிய சத்தியாதி நான்கும் மதித்த சொரூபக்குரவன் சுகோதயத் தானே. 9 |
2843: Dawn of Svarupa Bliss in Satya-Jnana-Ananda Manifestness, Form, Attributes and Past -All absorbed, Satya-Jnana-Ananda arises (Truth-Knowledge-Bliss) With the six attributes blending; (flower, purity, beauty, color, fragrance and radiance) Unto it, arises the Bliss of Holy Guru Of self-illumined Manifestness, In whom the Four* Saktis absorbed are. |
2944. உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தின் கரையற்ற சத்தியாதி காணில் அகார மருவுற்று உகாரம் மகாரம தாக உரையற்ற காரத்தில் உள்ளொளி யாமே. 10 |
2844: Acting on Adi Sakti Svarupa Siva is Aum He is Bliss beyond speech He is Silentness He the Self-illumined Manifestness; When He acts on Adi Sakti, He becomes the letters A, U and M; And thus as Aum defying description, He shines as the Light within. |
2845. தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து கலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே. 11 |
2845: He Stands Concealed in Kalas of Sakti In the valleys within the cranium I stood, Adoring Him in penance devout; And there I discovered Him, the Thief, With Sakti standing in Kalas concealed; Discovering Him, I ended my birth's cycle. |
2846. ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள் போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றே ஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லை நாமாம் முதல்வனும் நான்என லாமே. 12 |
2846: Knowledge of the Way of Becoming I knew the Way of Becoming, I knew the Way of Seeking the Rare One, I knew the Way of Entrance to Him; No more the egoity, None other the locale The Primal One I become, He and I one will be. |
13. ஊழ் |
13 FATE |
2847. செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியலென் மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென் வித்தகன் நந்தி விதிவழி யல்லது தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. 1 |
2847: Understand Fate's Working; Jnanis are not Thwarted What though you cut them, chop them, And with chistle their heads hammer, Or with cool sandal paste soften them? All these are but by Fate, Nandi decreed, Thus realizing they impassive remain, They, the Holy Jnanis, that Truth perceived. |
2848. தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால் வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று நான்முன்னம் செய்ததே நன்னில மானதே. 2 |
2848: The Past is Inexorable-Seek the Fair Land Nothing there is, Except by your past deeds come; The heavens cannot decree otherwise; And so by Muladhara Way I sought the Lord within the head; And what I did afore Took me to the Fair Land of Bliss. |
2849. ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப் பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே. 3 |
2849: Understanding Logic of Karmaic Law, I Sought Nandi The sands the river deposits Are by the river carried away; To none else is that task apportioned; (And so) I sought Nandi Of holy ashes and erect matted locks, And with Him inseparate stood, devout intense. |
2850. வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலன் கான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்என் தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென் நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே. 4 |
2850: Seek Lord Always What though the welkin thunders, What though the seas rise and foam, What though the fires spread and burn, What though the tempests roar and blast, Unconcerned I seek Lord In devotion intense. |
2851. ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென் கானத்து உழுவை கலந்து வளைக்கிலென் ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த ஞானத்து உழவினை நான்உழு வேனே. 5 |
2851: Plough the Field of Jnana What thought the elephant pursues, What though the arrow pierces, What though the wild tiger surrounds, Deep I plough the field of Jnana In the Other Land, Lord has me allotted. |
2852. கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன் நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும் பாடது நந்தி பரிசறி வார்க்கே. 6 |
2852: Jnanis Are Unconcerned If this body to harm comes There is One to fashion another; If a land to destruction goes, There is another land for people to migrate; If a house to pieces falls, There is another house to dwell; -Thus do their thoughts, unconcerned run, Who Nandi's bounty know. |
14. சிவ தரிசனம் |
14 DARSHAN OF SIVA |
2853. சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச் சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே. 1 |
2853: Siva Reveals in Doubt-Free Thought Those whose thoughts inseparable in Siva merge, In their thoughts, Siva reveals; Those who can vision their thoughts doubt-free, In their thoughts, Siva is. |
2854. வாக்கும் மனமும் மறைந்த மறைபொருள் நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே. 2 |
2854: He is Subtle Beyond Thought and Speech-Seek and Find Him Beyond speech and thought Is hidden that Vedic Object; Look at it; It is an Object subtle by far; It has no coming, nor going, no perishing; All blessings are For those who seek Lord true. |
2855. பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய் தரனாய் தனதென ஆறுஅறி வொண்ணா அரனாய் உலகில் அருள்புரிந் தானே. 3 |
2855: The Unknowable Bestows Grace as Hara As Paran, as Parparan and Beyond As constant interminable Light Transcendental; As Support Finite of all, As One beyond knowledge of Self, As Hara here below, He, His Grace showers. |
15. சிவ சொரூப தரிசனம் |
415 DARSHAN OF SIVA SVARUPA (MANIFESTNESS) |
2856. ஓதும் மயிரக்கால் தோறும் அமு தூரிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே. 1 |
2856: Supreme Svarupa Bliss Beyond Difference and Non-Difference Is that inviolate Bliss; In every hair root its ambrosial sweetness floods; Beyond the initial Manifestness Three it is; There indeed is the greatness vast of that Supreme Manifestness That Vedas praise so high. |
2857. உணர்வும் அவனே உயிரும் அவனே புணரும் அவனே புலவி அவனே இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 2 |
2857: He is the Fragrance in the Flower Within He is Sentience, He is Life; He is union, He is separation; He is Continuity beyond thought; He stands in the fragrance of flower within. |
2858. துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரும் முன்னி அவர்தம் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே. 3 |
2858: Seek Him There Within He who stands thus Of Him you think; Seek His Presence; He ends the imperfections Of those who seek Him; He is the unwritten Veda immutable; He is of Tapas great He stands within the head; For sure it is. |
2859. மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும் தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும் என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே. 4 |
2859: He Blessed Me Saying, "You Know" My thoughts woke up In lightning flash within; And as I woke up, The self-illumined Lord, the peerless One, Of Form golden-hued, Nandi of matted locks Entered into me and said, "You know;" And thus saying, in benignance He cast His glance upon me. |
2860. சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம் சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளி சுத்தப் பிரம துரியம் துரியத்துள் உய்த்த துரியத்து உறுபே ரொளியே. 5 |
2860: Brahma Turiya Beyond Triple Turiya Satya-Jnana Bliss is He It is Sivananda light That surpasses Thought; It is Pure Brahma Turiya; It is Turiya beyond Turiya; In it arises the Light Transcendental. |
2861. பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும் அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே. 6 |
2861: Svarupa Siva Beyond Bliss of Satya-Jnana-Ananda Paran He is not, Nor the expanding Paraparan is He; Nor the abiding Object Beyond; Nor the Vibrant Light above it; Nor the One who supports all; He is they and not they; Hara He is not Beyond Bliss is He. |
2862. முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன் பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால் சுத்தி யகன்றொர் சுகானந்த போதரே. 7 |
2862: Aim of Suddha State Mukti, Siddhi and mature Jnana attained, In devotion standing, In Param standing, In the mighty Sakti standing They realize the Tattvas; Then from that Suddha State They passes to Sukhananda Bodha State. |
2863. துரிய அதீதம் சொல்லறும் பாழாம் அரிய துரியம் அதீதம் புரியில் விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன் உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே. 8 |
2863: Ariya-Turiyatita Beyond; Turiyatita Beyond is Svarupa Turiyatita is Void That is beyond words; When Ariya Turiyatita state still above is reached, Jiva blossoms shimmering; Neither folding, nor unfolding; The Form too is altered; How to describe it! |
16. முத்தி பேதம், கரும நிருவாணம் |
16 MUKTI BHEDA AND KARMA NIRVANA (GRADATIONS OF LIBERATION) |
2864. ஓதிய முத்தியடைவே உயிர்பர பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே. 1 |
2864: Progression of Soul's Journey to Five Muktis Jiva reaches to (Jiva) Mukti first; Then passes on to Param State; And thence to Siva State; In the Turiya practised therein, Is the Primal Self-illumined Manifestness; And having attained Svarupa, Is reached the State of Nirvana. (In Ariya Turiyatita State.) |
2865. பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள் சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல் சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப் பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே. 2 |
2865: He is the Finite Goal He is Param that is reached By those who desire Him, Leaving their own desire behind; He is Lord of Fore-Head Eye Whom the learned who have learned all, Still learn about; He is the Transcendental Light Whom those who have bonds none Surround; He is the One, Whom those who have reached, Have ceased to prattle about. |
17. சூனிய சம்பாஷணை |
17 SUNYA SAMBHASANA (DIALOGUE OF SYMBOLISM) |
2866. காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய் ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம் ஏய பெருமான்இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனே. 1 |
2866: Mystery of Lord's Play Body the gambling board; Five the dice; Three the channels Fifty-one the squares Thus the Jivas play the game; He who thus leads them to it, The mystery of His play I know not. |
2867. தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே. 2 |
2867: Holy Way is Strewn With Thorns The Holy Way is by thorny bushes covered They know not how to remove it; They who know how to remove it Are they for whom my heart yearns. |
2868. ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறுபடுவன நான்கு பனையுள ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே. 3 |
2868: Kundalini Yoga Six are the streets In their junction are juicy palm trees four; With ladder difficult to climb, I ascended the palm's heights; And there I saw the seas seven. |
2869. வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது தொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகண் முழுதும் பழுத்தது வாழைக் கனியே. 4 |
2869: Abnegation of Desires Leading to Liberation Through Yoga I sowed the seed of brinjal And the shoot of balsam-pear arose; I dug up the dust; And the pumpkin blossomed; The gardner-gang prayed and ran; Full well ripened the fruit of plantain. |
2870. ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர் செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம் பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே. 5 |
2870: Sahasrara Center of Liberation With the seed of Lord There is a field Where the Jiva ripens That field they know not; If the Grace of Blue-throated Lord there is, Easy to enter that field In Truth it is. |
2871. பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே. 6 |
2871: Turiya State A deep field there is one; Waste fields two are there; Another alien field with them lay mingled; Those that plough the field of heart For them the field fed with water, Lay ripe in harvest rich. |
2872. மூவணை ஏரும் உழுவது முக்காணி தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும் நாஅணைகோலி நடுவில் செறுஉழார் காலணை கோலிக்களர்உழு வாரே. 7 |
2872: Kundalini Yoga In the Triangular Field, Are the Ploughs Three; Yoke the bulls tight with rope; Drive the ploughshare deep They who held not their tongue, Ploughed not in the Center Closing their legs together, They plough the waste in vain. |
2873. ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர் பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில் கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே. 8 |
2873: Control of Breath Two the picottahs, seven the wells; The elder draws out, the younger waters; If into fields the water flows not, And into waste flows, Verily is it unto the fowl That the harlot rears. |
2874. பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள குட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துள குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும் பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே. 9 |
2874: Tattvas-Lower and Higher Twenty and four the cows that stray uncontrolled, Other cows gentler are seven and five; Well may the gentler ones a whole pot of milk give; But Jiva has the straying uncontrolled ones alone. |
2875. ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும் காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே. 10 |
2875: Yoga Way to Transcend Tattvas Twenty and four the cows that are in calf; Better far a pitcher of milk from cows that yield; When you know how to milk the cows of breath (yoga) The other cows near not. |
2876. தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல் மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத் தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே. 11 |
2876: Yogic Kecari Mudra For Liberation In the upper storey of the house of smith Was a bud-like mass, that unto copper (sheet) expanded; He shaped it round, folding it in Truth Thus the smith made it his own. |
2877. அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி திரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டி வரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில் விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே. 12 |
2877: Sublimate Bindu Within into Para Bindu In the eroding seed bed Of Sorrow's field, Train the flowing water And dam it tight; Then plough with the goodly young bull, And transplant the cucumber seedling; That shall indeed into goodly seed ripe. |
2878. இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக் கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார் கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே. 13 |
2878: Liberation only for Those who Strive Strewing the seed, And applying manure in baskets full, And ploughing with yoked bulls, And digging out the weeds, Thus producing rice, And cooking in vessels big, Gently should they consume it; This they do not; How then do they the sweet rice crop harvest, Lying indifferent? |
2879. விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம் விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே. 14 |
2879: Attaining the Triple Turiya States The seed for future ripened The seed ripened over quite a stretch, For those whom the seed ripened in stages three The three spaces above, too, ripened. |
2880. களர்உழு வார்கள் கருத்தை அறியோம் களர்உழு வார்கள் கருதலும் இல்லைக் களர்உழு வார்கள் களரின் முளைத்த வளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே. 15 |
2880: Do not Cultivate the Waste of Worldly Pleasures Why they plough the waste, we know not, They who plough the waste have design none, They who plough the waste perish, Unto the young weeds That waste shoots. |
2881. கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே. 16 |
2881: Yoga Leads to Grace Within the shed where jackals howl, Rouse your call; The binding Pasas to Fire Consign; Thus spend days continuous; Then the goodly Lady appears And there in the home, you shall be well. |
2882. மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக் குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன் முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே. 17 |
2882: Experiences in the Mystic Sphere of Sahasrathala On the mountain it rained, The young deer leapt; The rich ripe fruit from bunch above dropped; Unto the metal on the smith's furnace, It melted; And over the heart, He made it flow. |
2883. பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே. 18 |
2883: Control Senses In Brahmin's home are Milk Cows Five With none to herd them, they stray uncontrolled, If a cowherd there is, and controlled they are, The Five Cows will milk in abundance give. |
2884. ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும் தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும் தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே. 19 |
2884: How to be Youthful The five wild bulls of Jiva, And the fierce lions thirty, The two mangoes sweet, The fradulent nine And the mind within, If yours they become, firm controlled, The bull, old becomes not; If not, they put fire to it. |
2885. எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத் தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத மலராத பூவின் மணத்தின் மதுவைப் பிறவாத வண்டு மணமுண்ட வாறே. 20 |
2885: Immortality Through Yoga The Truth of the Unwritten Book, The Immaculate Virgin in clarity chanting, The nectar of Flower, unopened until then, Gushed forth; As the Bee its fragrance drank, Unborn it became. |
2886. போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும் கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி ஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும் வேகின்ற கூரை விருத்திபெற் றாரே. 21 |
2886: Sure Death, if Breath is not Controlled The deceptive one that leaves, The false seed that enters; The Five who eat of the broth made Of the ripe fruit of flourishing Jamun tree; -All, all, went the burning roof's way. |
2887. மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர் பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே. 22 |
2887: Body Perishes if Yoga is not Practiced From the Bamboo Shoot arose a Margosa tree Close on Margosa was a Palmyrah, In that Palm is a Snake Knowing not to drive that Snake and eat it, The Margosa tree withered away. |
2888. பத்துப் பரும்புலி யானை பதினைந்து வித்தகர் ஐவர் வினோகர் ஈ ரெண்மர் அத்தகு மூவர் அறுவர் மருத்துவர் அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே. 23 |
2888: How the Body is Ten the tigers big, Ten and Five the elephants, Five the learned Ten the jesters, Three that are upright Six the physicians, Five the lordly ones, There they all stand. |
2889. இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பின் இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில் இரண்டு கடாவும் ஒருகடா வாமே. 24 |
2889: Control Breath Two the bulls in this hamlet, One the servant for the bulls two; Control the bulls two, firm, As one they will then be. |
2890. ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப் பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால் முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள் நித்தம் பொருது நிரம்பநின் றாரே. 25 |
2890: The Perfect Ones Practice Yoga Daily Level up Mind-Garden in equanimity In devotion's net, plant the cotton tree By salvation's rope enter the place of Three, Daily do they ascend thus, Who perfection filled are. |
2891. கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும் நாகையும் பூழும் நடுவில் உறைவன நாகையைக் கூகை நணுகல் உறுதலும் கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 26 |
2891: The Six Evils Dwell Within and God's Warning to Them The Owl, the Snake, the Parrot and the Cat, The Mynah and the Quail They, all, within dwell; As the Owl nears the Mynah The Mouse warns Mynah, screeching loud. |
2892. குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின் நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான் உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும் புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே. 27 |
2892: Kundalini Yoga Alone Drives Away Triple Pasas In the toddy measure* of foul smell That a derisive laugh draws and (senses) to shambles sends, He placed the white rats three; If on the fire* placed, they run; Else they remain; Of flesh-born, How will they ever go? |
2893. காடுபுக் கார்இனிக் காணார் கருவெளி கூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும் மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம் மூடு புகாவிடின் மூவனை யாமே. 28 |
2893: Libertion Possible Only By Renunciation They enter the Forest dense, No more will they see the Sky above, The Five Steeds together entered, The Six Camels were closed up, entire; If they leave the Forest dense, The Three will near come. |
2894. கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும் காறையும் நாணும் வளையலும் கண்டவர் பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல் ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே. 29 |
2894: Worldly Desires Lead to Perdition Food, raiment and phialled unguents, Necklace, waistband and bangles lovely, They who (as goal) saw, Fly away Unto a garment piece on a high rock laid, Into the deep pit of six sins they fall And there immersed are. |
2895. துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல் விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும் வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள் ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே. 30 |
2895: Kundalini Removes Obstacles to Reach Sahasrathala Beyond the Islet beyond to the Mountain on the Bank They daily thrice journeyed, To superintend the Field there, She there is, who moves the Mountain obstacle within stands; Her place we know not. |
2896. பருந்துங் கிளியும் படுபறை கொட்டத் திருந்திய மாதர் திருமணப் பட்டார் பெருந்தவப் பூதம் போலுரு வாகும் இருந்திய பேற்றினில் இன்புறு வாரே. 31 |
2896: Kundalini Unites in Siva The Kite and Parrot together beat the drum loud The Shapely Lady her wedding celebrated, The Form of the holy Element she attained, In that state, rapturous She remained. |
2897. கூடும் பறவை இரைகொத்தி மற்றதன் ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும் சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற பாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே. 32 |
2897: Goal of Jiva is to Seek Liberation The mating Bird pecked at food And approaching its partner fed it Unto it easy is the Goal to reach For those who eat of Ghee in the melting Fire within And away the Darkness drive. |
2898. இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின் குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும் தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே. 33 |
2898: Mystic Flower Within Leaves none, bees none, Flower there is; Top none, sheath none, root there is; Bunch none, Flower to pluck there is; Head none to wear; The Branch that bent withers not. |
2899. அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர் மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த் தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. 34 |
2899: The Truly Great Vision the Lord in Cranial Cavity Visioning the Banyan tree that stands Beyond, They adore the holy Lord and in Him unite; Those who transcend the Five Sorrows exceeding Are the truly great; Low at Lord's Feet they lie; And there they remain. |
2900. கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம் காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர் காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக் கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே. 35 |
2900: Conquer Senses and Reach Siva In the Way of Loud Call of Jiva Is a Forest that stretches two leagues far; Inside stand Robber that ceases and binds, If the White Guard chases the Black thieves And away shout them loud Then does Jiva the Roof of Safety reach. |
2901. கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும் கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார் எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே. 36 |
2901: Sweet Ambrosia and Bitter Nux Vomica Within the Body In the tank where bloomed Kotti and Lily Are Neem and Nux Vomica, too; They who eat not the Salad of Plantain sweet, With candy and honey mixed, Lo! hanker after the fruit of nux vomica. |
2902. பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக் குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும் கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்ட பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே. 37 |
2902: Sakti Grants Grace to Jiva As He-Bee and She-Bee The Lord is seated on the throne The multi-hued umbrella aloft canopying, The Lowly Bee, of Pasa embodied, Drinks of (nectar), the She-Bee by Her glance grants; That verily is rapture surpassing. |
2903. கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன் எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே. 38 |
2903: Jivas Graze in the Backwood of Worldly Desires What to do with those cows In the backwoods of desires graze? Take them beyond, And lead them to Feet of Lord; Discipline them in ways superior; Thus manage the herd; Until then, their thoughts turn not From the backwoods of worldly pleasures. |
2904. தட்டத்து நீரிலே தாமரை பூத்தது குட்டத்து நீரில் குவளை எழுந்தது விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக் குட்டத்தில் கிட்டதோர் கொம்மட்டி யாமே. 39 |
2904: Lord in Sahasrathala In the Water Above, the Lotus blossomed, In the Water Below, the Lily arose To those who can see light in the Cross-beam above The Lord is unto a cool Watermelon, That fruits even in regions low. |
2905. ஆறு பறவைகள் ஐந்தக்து உள்ளன நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின் மாறுதல் இன்றி மனைபுக லாமே. 40 |
2905: Attaining Liberation in Sahasrathala Six the Birds in the house of Five, Hundred the birds at the top of Tree, Having ascended the Seven Steps high, You shall sure reach the Home. |
2906. கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள் வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங் கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள் ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே. 41 |
2906: Light Dawns in Sahasrathala Within the Bathing Well, Where they water draw The roundly Earth swells And Water springs; Bind your breath and with Rope-Work And center your thoughts; Well may the Light Divine dawn. |
2707. ஏழு வளைகடல் எட்டுக் குலவரை யாழும் விசும்பினில் அங்கி மழைவளி தாழு மிருநிலந் தன்மை ய்துகண்டு வாழ நினைக்கில தாலய மாமே. 42 |
2907: Reach the Holy Temple of Sahasrathala Seven the circling Seas, eight the Mountain ranges In the depths of Space is Fire, Rain and Wind And the Land expansive; Visioning it, if you dwell in it That verily a Holy Temple is. |
2908. ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச் சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர் கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள் மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே. 43 |
2908: Body Invaded by Indriyas Embracing in warmth and pregnancy developing, They made this body and (the couple) left; The body-pole thus erected; The bewitching Birds of Deep well invaded; This way was it made, through lives successive. |
2909. கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும் கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர் கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும் இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே. 44 |
2909: Lord's Love is Supreme Two there are, the wedding drum and the wedding Thali; Stronger than the wedding drum and thali is the crow-bar; Stronger than the drum, thali and crow-bar Is the love that comes of Lord's Grace. |
2910. கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர் முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர் பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன் மறையொன்று கண்ட துருவம் போ லாமே. 45 |
2910: Vision Siva and Attain Golden Form They who saw the Fish, remain looking at the fish; They who saw the Hare, are of the Three rid; He who controlled the battle tumultuous, See the Hidden Truth, His form golden becomes. |
2911. கோரை எழுந்து கிடந்த குளத்தினில் ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது நாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார் பாரை கிடக்கப் படிகின்ற வாறே. 46 |
2913: Lord is Hidden Deep Within In the Tank where Reeds flourished, In Creepers spread and entwined filled, The Lord is not unto the stork that on them gently walks Deep into the Rocky Floor, He dives For Jiva's redemption to grant. |
2912. கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும் எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே. 47 |
2912: Yoga Way to Liberation Of three leagues is the Garden below, Of half a league is the Forest above, Frontiers blurring the two routes intermingled; They who can see the Frontiers clear Can quick cross the backyard And reach the Hamlet safe. |
2913. உழவொன்று வித்து ஒருங்கின காலத்து எழுமழை பெய்யாது இருநிலச் செல்வி தழுவி வினைசெய்து தான்பய வாது வழுவாது போவன் வளர்சடை யோனே. 48 |
2913: No More Karmas if Yoga is Attained When after Ploughing, Seed is cast, And copious Rains fall, And it soaks the Land, No more will Karmas germinate; Sure He comes, The Lord of flourishing matted locks. |
2914. பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம் ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப் பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே. 49 |
2914: Jiva Vanquishes Indriyas by Yoga The Tiger that leaps twelve leagues crouches, The Billows of the Hidden Sea soft spreads, The nectar-sweet rapturous ambrosia wells up, Thus did Jiva surround the Five that harassed. |
2915. தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு வாணிபம் செய்து வழங்கி வளர்மகன் நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே. 50 |
2915: Jiva's Journey in Yoga Sea He boarded a boat and launched into sea, He traded well and flourished fast; The goodly man, To a She-devil gave his heart, And in spirit lost droped; To him as a rich fruit of nectar sweet Is that Divine Water that flows. |
2916. முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள் செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர் நக்கு மலருண்டு நடுவுநின் றாரே. 51 |
2916: Yoga's Triumph In the river of Leagues Three Are Plantain Trees Three; Ruddy fruits of triple Malas they bore; They who are with the Lord exceeding, Hoisted their Flag; And seeking the Virgin through Central Sushumna, Inhaled the Flower's fragrance, divine sweet. |
2917. அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில் கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே. 52 see illustration at the end. |
2917: Yoga Vanquishes Tattvas There is an Athi tree with root and top, At the tip end high is the Bamboo triple crested, With flag and army are evil spies five times five Destroyed they shall be, And the Sacred Conch in victory blow. |
2918. பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம் தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக் குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின் குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. 53 |
2918: Conquer Indriyas and Reach Iruvinai-Oppu and Malapari Pakam Pig and Snake, Cow and Monkey Together were in the lowly Jackal herd; Joining them not and debasing himself not, When, in balance, deeds good and bad are equal weighed The Jiva, tinier than crab's-eye berry, Its ego's diminution saw. |
2919. மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக் கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம் பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால் கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே. 54 |
2919: Freedom From Fetters Unopened a Bud there is; Freed from Fetters, The bud soon blossoms, that you see Give up desires, the Tattvas perish; Unless they be from Fetters free, They see not the Blossom. |
2920. நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம் யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை கூரும் மழைபொழி யாது பொழிபுனல் தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே. 55 |
2920: Uniqueness of Ambrosial Flow in Cranium Green that Land, you no water flows, None know it ever; The Water that flows rain devoid Stands not in Land untilled. |
2921. கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில் மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. 56 |
2921: Jiva Becomes Siva by Kundalini Yoga When the Owl gets to the top of Kurunda tree And realizes desire is the source of world Then the Snake standing in the Center teaches (Jnana) And Jiva, Siva becomes. |
2922. வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர் வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே. 57 |
2922: Iruvinai Oppu Leads to Siva The Plantain Tree and the Surai Creeper (pepper) together covered space; The Surai creeper is stronger by far than the Plantain tree, they say; Cutting down the Plantain tree and Surai creeper together, The Plantain extending flourishes sure. |
2923. நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப் புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன் விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே. 58 |
2923: Give up Worldly Pursuits and Practice Yoga Digging not the Earth, The upland Kurava sails seas And catches fatty fish; Let him give it up; (Rather let him the Earth dig) There is a way of a Rich Catch, That is Wealth and Food for all. |
2924. தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில் விளிப்பதோர் சங்குண்டு வேந்தணை நாடிக் களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும் அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே. 59 |
2924: Reach Nada by Yoga and Attain Status of God In the House of Goldsmith a Child flourishes, A Conch of Call there is; Blow it and call the Lord in Joy; To the Potter and the Titled Minister alike Are granted the high state; That do you seek. |
2925. குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை படைகண்டு மீண்டது பாதி வழியில் உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார் அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே. 60 |
2925: Indriyas Obstruct the Yoga Journey The Temple buffalo left the Shed, It saw the Army and half-way turned; The Chief held counsel with Minister, The Citizens closed the Gates, Five and Four. |
2926. போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டொடு நாலு புரவியும் பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே. 61 |
2926: The Lord Drives in the Tattvas into the Infant Body The eight constituents of Body Subtle That ultimate leave, The eight and ten Tattvas that sneak in, With Purusha in them immersed, The orifices nine, The Kundalini that serpent-like coils, The life breath twelve finger-measure (angula) long, -If these, the Divine Charioteer drives not in, Verily may the infant less than human be (say, pig). |
2927. பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக் கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும் தூசி மறவன் துணைவழி எய்திடப் பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே. 62 |
2927: Pasa Disappears With Guru's Guidance In the Lagoon that is Moss covered, Gently walking, the Shy Heron feeds; When the Marching Warrior's guidance got, Pasa, to ground laid, fluttered away. |
2928. கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு வம்பாய் மலர்ந்ததோர் பூவுடைப் பூவக்குள் வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே. 63 |
2928: Siva Draws Jiva Unto Himself On the Peaked Mountain is a Summit High, Beyond the Summit blows a Gusty Wind; There blossomed a Flower that its fragrance spread Within that Flower, a Bee its Nectar imbibed, There the Lord unto Himself Jiva draws. |
2929. வீணையும் தண்டும் விரவி இசைமுரல் தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம் காணியும் அங்கே கலக்கின்ற வாறே. 64 |
2929: Arouse Kundalini to Reach Cranium Lute and Flute, their melody intermingling, Siva marched ahead in Cranium within; Even before the Bargain was struck, The Land was up there for Him to possess. |
2930. கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர் தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே. 65 |
2930: Reaching the Moon Sphere-A Mystic Secret The trade with the One in Ambrosia None know about, But those who the Secret Cavern entered; They know not, When the Moon rises No more darkness will be; Some did reach there and remained ever, They truly, are the holy beings devout. |
2931. போதும் புலர்fந்தது பொன்னிறங் கொண்டது தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது மாதர் இருந்ததோர் மண்டலம் தானே. 66 |
2931: Dawn of Jnana in Sahasrara The Day dawned, a golden hue it took, On the banks high, the Mastwood shed its golden pollen; Thus it is where the Holy Lord abides; That Sphere the Damsel reached and remained. |
2932. கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே காமுற்று அகத்தி இடுவர் கடைபொறும் வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி யாமுற்ற அதட்டினால் ஐந்துண்ண லாமே. 67 |
2932: Properly Guided Jiva Reaches the Finite State The tribes of Indriyas to Jiva belong Each at his gate with swords fight; If constant guided, Jiva takes the True Way to Frontier; From that born none ever return; From that very plane shall he transcend, The Five-States-Beyond. |
2933. தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால் நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும் மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டு காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 68 |
2933: Body No More Counts When Jiva-Siva Union is Effected When in the Garden, The Fruit of Mango, ripened, dropped, What matters if Jackals outside howl? When the Primal One was by Kundalini Fire reached, The fleshly body that led to it, Forever left. |
2934. புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப் புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப் புலம்பின் அவளொடும் போகம் நுகரும் புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே. 69 |
2934: Dawn of Jnana Eternal Day-Light "Dawn is it"-thus shrilled the Birds, "Dawn is it"-thus, the flower-like Damsel Separation fearing, bewailed; With Her in eternal union the Lord joyed; And for Jiva no more the dawn No more the separation. |
2935. தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும் வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை ஆணி கலங்கில் அதுஇது வாமே. 70 |
2935: When Pasas Leave Jiva Unites in Siva A Boat there is in the River Ghat The Five plant their feet and row; Thus on the river route they trade; If in the midst the Rudder wobbles, That becomes This. (No more the world trade.) |
18. மோன சமாதி |
18 MAUNA SAMADHI (TRANSCENDENTAL SILENTNESS) |
2936. நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம் மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே. 1 |
2936: Through Samadhi Being Within is Reached They stood, they sat, they lay -Thus their state can be described not; Their thought is in Samadhi's Silentness; There is a Being Hidden; They who reach it (Samadhi), Have reached Him indeed. |
2937. காட்டும் குறியும் கடந்த அக் காரணம் ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன் கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே. 2 |
2937: Guru Alone Can Show the Way He is beyond the Signs and Mudras He is the Cause; What avails describing Him in Books? All those are unto excrescence growth on Sheep's neck; -Unless the Guru himself leads you to Him. |
2938. உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும் உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம் உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே. 3 |
2938: Know the Finite Truth They that the Truth know, see worlds all, They that the Truth know, have sorrows none, When they that the Truth thus saw They indeed have seen the Truth Finite. |
2939. மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன் பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன் சிறப்பிடை யான்திரு மங்கையும் தானும் உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே. 4 |
2939: Siva and Sakti are in Samadhi Union Even in my forgetfulness He stands, He is Lord of Maya-Land, He is of Compassion vast, He ended my birth, He is of qualities great; Himself and His Holy Sakti Sleep in sleepless union. |
2940. துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய துரியம் அதன்மீது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே உரையில் அநுபூ திகத்தினுள் ளானே. 5 |
2940: Lord is Beyond Turiyatita He is the Light Transcendental* That shines beyond Turiyas Three, In the Turiyatita that transcends them, Beyond waking, dreaming sushupti states; In that state, defying thought and speech. |
2941. உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன் பொருவிலி பூதப் படையுடை யாளி மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே. 6 |
2941: Attributes of Siva Formless is He, Bodyless is He, Blemishless is He, Richless is He, Harmless is He, Celestial of celestials is He, Contentionless is He, Bhoota-army possessed is He, Attachmentless is He, He entered my thoughts. |
2942. கண்டறி வார்இல்லைக் காயத்தின் நந்தியை எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர் அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத் தொண்டர் முகந்த துறையறி யோமே. 7 |
2942: Bliss of Devotees is Beyond Description None have seen Him and known Him, He, the Nandi, within the body is; All, in directions eight, Praise Him as Lord; The unending bliss of His devotees many; Surpasses universes vast -How much they joyed Him, little do we know! |
2943. தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்ல நிட்களம் அல்ல சகள நிலையல்ல அற்புத மாகி அனுபோகக் காமம்போல் கற்பனை இன்றிக் கலந்துநின் றானே. 8 |
2943: Felicity of Union of Jiva and Siva Tat-Para His is not, Sadasiva He is not, Formless is He, Formed is He not, Wondrous indeed unto felicity of sex-union enjoyed Imagination baffling, He in me in union stood. |
2944. முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே. 9 |
2944: Divine Felicity Beyond Words Thou fools who see with fleshly eyes Know! To see with inner eye is bliss true; How can mother tell the daughter Of the felicity in the union with her husband? In what terms will she that describe? |
2945. அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச் செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக் கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை எப்படி அப்படி என்னும் அவ்வாறே. 10 |
2945: Transcendental Union Beyond Word and Speech As salt in water, in Lord I mixed, Transcending Param and Paraparam states, Beyond word and speech I in union merged; "How was It?"-you ask "It was It"-I say. |
2946. கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம் தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவை பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால் கொண்டான் அறிவன் குணம்பல தானே. 11 |
2946: Deceptive Ways of World Lovely to look at is the fruit of nux-vomica, Only those who eat know its taste (bitter) When virgin matures and full woman becomes, Only then will husband know her qualtities diverse. |
2947. நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன உந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப் புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே. 12 |
2947: Jiva Light Merges in Siva Light Nandi He was, in Street-Center (of Sahasrara), Samadhi and other ways of union, of themselves went Into the Light, within navel center rises, By my Jnana, I merged. |
2948. விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து பதறு படாதே பழமறை பார்த்துக் கதறிய பாழைக் கடந்ததக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின் றானே. 13 |
2948: Merging into Void Undistracted, I sit aloof and meditate, Doubt-free, I follow the ancient Vedas, I cross the awesome waste, this life is, And beyond into the Void, that defies imagination, I merge. |
2949. வாடா மலர்புனை சேவடி வானவர் கூடார் அறநெறி நாடொறும் இன்புறச் சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்று நாடார் அமுதுற நாடார் அமுதமே. 14 |
2949: The Celestials Seek Him Not His Holy Feet bedecked in unfading blooms The Celestials seek not; To the Holy Way they take not; To the radiance of the lovely lotus within, They penetrate not, They seek not to drink of the Divine Ambrosia. |
2950. அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும் பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல் சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே. 15 |
2950: Lord's Gushing Love When for purposeful union the lovers sit and talk Of a sudden gushes their passion; When the Lord of fragrant Konrai flower beholds Those who determined sit to meet Him, He His Grace unhesitating grants. |
2951. தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்துபின் நானும் அழிந்தமை நானறி யேனே. 16 |
2951: Nature of Union in God Myself perishing, my wealth perishing, Body perishing and life perishing, Heaven perishing and mind perishing, My ego perishing -This I knew not (is union in God). |
2952. இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே உருளாத கன்மனம் உற்றுநின் றேனே. 17 |
2952: Merging into Finite Reality Darkness and Space I transcended, As substance into Substance I merged, To the Feet of Lord in Grace abounding, Firm as rock immovable My thoughts entire went. |
2953. ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம் ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே. 18 |
2953: Transcendental Awareness Meditating in oneness, I visioned Paraparam, Meditating in oneness, I realized Siva-State Meditating in oneness, I experienced Awareness Transcendental Meditating in oneness, I witnessed aeons upon aeons. |
19. வரையுரை மாட்சி |
19 GREATNESS OF LIMITLESSNESS BEYOND |
2954. தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது தான்அவ னானபின் ஆரை நினைவது காமனை வென்றகண் ஆரை உகப்பது தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே. 1 |
2954: State of Oneness in God When you have, yourself, limitless become, Who, in limit, are you to see? When you have, yourself, He become, Who are you to think of? The Eyes that vanquished the God of Love, Whom are they in longing to look for? -Tell me, yourself, the real Truth. |
2955. உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள் கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற்று இருந்தான் புரிசடை யோனே. 2 |
2955: Thoughts Stand Still in the Beyond You dumb ones! They seek to speak, Of the One beyond speech! Can you ever reach the shores Of the Shoreless Vast? For them whose thoughts stand still, Unto the waveless waters, Unreserved He appears; He of the matted locks. |
2956. மனமாயை மாயைஇம் மாயை மயக்கம் மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே. 3 |
2956: Maya Creates No Illusions There Maya is but mind's work, It creates the illusions; When the mind's illusion disappears, Nothing there left to worry about; Death will not there be; Chatter no more; To seek the Self is Truth Divine. |
20. அணைந்தோர் தன்மை |
20 GREATNESS OF THE REALIZED |
2957. மலமில்லை மாசில்லை மானாபி மானம் குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே. 1 |
2957: The Realized Souls Have No Possessions Mala none; impurity none; pride and prejudice none; Family none, excellences none; affluence none; For them who in wisdom Plant themselves in Nandi -Firm in His love. |
2958. ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம் கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன் அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன் செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே. 2 |
2958: They Become God Ended the birth; sundered the bonds; God and I one became; No more for me the way of rebirth; I have met Siva the Auspicious. |
2959. ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும் சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப் பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே. 3 |
2959: They Want Nothing Cane of sugar, rice of fineness, garments of richness And water of green glades too, Our Land possesses; By the Grace of lovely Lady, That is peacock shaped, Nothing we want, nothing, indeed. |
2960. ஆராலும் என்னை அமட்டஒண் ணாதிதினிச் சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன் சீராடி அங்கே திரிவதால் லால் இனி யார்படுஞ் சாரா அறிவறிந் தேனே. 4 |
2960: They are Inseparable in God None can intimidate me hereafter, The Lord came and entered my thoughts, There will I sport and wander in joy; No more will I with anyone else be. |
2961. பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம் தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை அரிந்தேன் வினையை அயில்மன வாளால் முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே. 5 |
2961: How They Hastened to the City of God I freed myself of fetters The Creator bound me with, I learned the way of reaching Siva; I smote Karmas with the sharp sword of mind, I stood ego lost; And now I hasten toward the City of God. |
2962. ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவது நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழம் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே. 6 |
2962: Sweetness of Namasivaya Fruit One the God for worlds all, One is He, the life of worlds all, Lovely indeed is Namasivaya Fruit, Sweet it is to them Who of it tasted. |
2963. சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன் வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன் அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள் சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே. 7 |
2963: Doubt-Free State of the God Realized The Lord who wears moon and serpent on His matted hair, He, the jewelled lamp That accepted me in His service, The Being Rare, Neither beginning nor end has, He entered my thoughts and made me doubt-free. |
2964. பண்டுஎங்குள் ஈசன் நெடுமால் பிரமனைக் கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லை
|